3 ‘தமிழக’ மாவட்டங்கள் உட்பட... நாடு முழுவதும் ‘75 மாவட்டங்கள்’... ‘மார்ச் 31’ வரை முற்றிலும் ‘முடக்கம்’...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நாட்டின் 75 மாவட்டங்களை முற்றிலுமாக முடக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300ஐத் தாண்டியுள்ள நிலையில், வைரஸ் பரவுவதைத் தடுக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட அல்லது அதனால் உயிரிழப்பு ஏற்பட்ட 75 மாவட்டங்களை முற்றிலுமாக முடக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

இந்தப் பட்டியலில் தென்னிந்தியாவிலுள்ள முக்கிய நகரங்களான சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிவையும் இடம்பெற்றுள்ளன. இந்த மாவட்டங்களில் அத்தியாவசிய தேவைகள் தவிர அனைத்து சேவைகளும் முடக்கப்படும் எனத் தெரிகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் இதுவரை 7 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு ஆகிய 3 மாவட்டங்கள் முடக்கப்படலாம் எனத் தெரிகிறது. இந்த 3 மாவட்டங்களுடன் கோவை மாவட்டமும் முடக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மற்ற மாவட்டங்களில் இருந்து இந்த மாவட்டங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, இந்த மாவட்டங்களின் எல்லைகள் மூடி சீல் வைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் இந்தப் பட்டியலில் புதுச்சேரியின் மாஹே, கர்நாடகாவில் உள்ள பெங்களூரு, தார்வாத், கூர்க், சிக்பல்லபுரா, கல்புர்கி, மைசூரு மற்றும்  கேரளாவில் உள்ள திருவனந்தபுரம், கோட்டயம், எர்ணாகுளம், பத்தினம்திட்டா, மலப்புரம், கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களும் இடம்பெற்றுள்ளன.

CORONAVIRUS, LOCKDOWN, TN, DISTRICTS, CHENNAI, COIMBATORE, KANCHIPURAM, ERODE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்