'வேகமாக' பரவும் கொரோனா... மத்திய அரசு 'உத்தரவால்'... தயார் நிலையில் ராணுவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், ராணுவத்தை தயார் நிலையில் இருக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டு இருக்கிறது.
இந்தியாவில் 700-க்கும் அதிகமானோர் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இதுவரை 13 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்து இருக்கின்றனர். இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு, எல்லைகளை மூடுவது, மக்கள் மத்தியில் போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அந்தந்த மாநில அரசுகளுக்கு உதவிட ராணுவத்தை தயார் நிலையில் இருக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி அனைத்து மாநிலங்களிலும் ராணுவம் மற்றும் விமானப்படையினர் தயார் நிலையில் உள்ளனர். மாநில அரசின் வேண்டுகோளுக்கிணங்க ராணுவத்தினர் செயல்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான பேரிடர்கள், வெள்ளம், புயல் போன்றவற்றின் போது பொதுமக்களை மீட்கவும், பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் இந்திய அரசின் முப்படையும் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவிகளை செய்வது வாடிக்கையான ஒன்று தான். அந்த வகையில் தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கும் இந்திய ராணுவத்தை பயன்படுத்திட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- WATCH VIDEO: ‘கலங்கடிக்கும் துன்பம்’... ‘முடங்கிக் கிடக்கும் நியூயார்க் நகர மக்களுக்கு’... 'அட்சயப் பாத்திரமான இந்தியர்கள்'!
- ‘கொரோனா’ கண்காணிப்பில் இருந்து ‘தப்பிய’ இளைஞர்... ‘தேடிப்பிடித்த’ போலீசாருக்கு ‘அடுத்தடுத்து’ காத்திருந்த அதிர்ச்சி... ‘பரபரப்பு’ சம்பவம்...
- "இந்த அட்வைஸ் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?..." 'மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு' போட்டியாக....'களமிறங்கிய பிசிசிஐ...'
- "இவருதான் உலகத்தையே ஒரு வழி பண்ணவரு..." "அக்யூஸ்டின் துல்லிய புகைப்படம் இதுதான்..." 'புகைப்படத்தை' வெளியிட்டது 'ஃபிரான்சின்' 'INSERM நிறுவனம்...'
- ‘திருமண’ நாளன்று அதிர்ச்சியில் ‘உறைய’ வைத்த அழைப்பு... ‘வீடியோ’ காலில் பார்த்து ‘கதறிய’ மனைவி... ‘கலங்கவைக்கும்’ சம்பவம்...
- WATCH VIDEO: ‘லாக் டவுன் நேரத்தில் ஏன் இப்படி பண்றீங்க?’... ‘திரைப்படம் போலவே, நிஜத்தில் வெளுத்து வாங்கும் குழந்தை நட்சத்திரம்’... வைரலாகும் வீடியோ!
- சாப்பாடு இல்லாம எப்படி சார் உயிர் வாழ முடியும்...? 'நாங்க ஊருக்கு போகணும்...' கேரளாவில் மாட்டிக்கொண்ட கட்டிட தொழிலாளர்கள்...!
- ‘இப்படிலாம் பண்ணா’... ‘டிக் டாக் பந்தயத்திற்காக இளைஞர் செய்த அதிர்ச்சி காரியம்’... ‘இறுதியில் நடந்த துயரம்!
- ‘24 வயது’ இளைஞருக்கு கொரோனா... தமிழகத்தில் ‘27 ஆக’ உயர்ந்துள்ள பாதிப்பு... ‘அமைச்சர்’ தகவல்...
- '30 பங்களாக்களை' 'தானம்' செய்த 'தொழிலதிபர்...''கொரோனா' சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ள 'அனுமதி...' 'வசதிகளை' ஏற்படுத்தித் தருவதாகவும் 'உறுதி...'