இந்தியாவில் 'தொடர்ந்து' பாதிப்பு 'அதிகரித்து' வரும் நிலையில்... 'ஐசிஎம்ஆர்' வெளியிட்டுள்ள 'ஆறுதல்' செய்தி...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையிலும் பாசிட்டிவ் விகிதம் அதிகரிக்கவில்லை என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தற்போது வரை கொரோனாவால் 6,761 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 206 ஆகவும், குணமடைந்தவர்களின்  எண்ணிக்கை 516 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்நிலையில் உலகம் முழுவதையும் உலுக்கி வரும் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளைப் போல இந்தியாவில் சமூகப் பரவல் இன்னும் தொடங்கவில்லை எனவும், கொரோனா வைரஸ் பாசிட்டிவ் கேஸ்களிலும் அதிகரிப்பு எதுவும் இல்லை எனவும் இந்திய மருத்துவ ஆராய்சிக் கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள தகவலில், "இந்தியாவில் இதுவரை 1,30,792 பேரிடமிருந்து சேகரிக்கப்பட்ட 1,44,919 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளதில், பாசிட்டிவ் விகிதம் 3-5% என்ற அளவில்தான் உள்ளது. மேலும் குறிப்பிடத்தகுந்த அளவில் கொரோனா பாசிட்டிவ் முடிவுகள் அதிகரிக்கவில்லை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்