'ஒட்டுமொத்தமாக' அதிகரித்தாலும்... '25 மாவட்டங்களில்' குறைந்துள்ள 'கொரோனா' பாதிப்பு... 'ஐசிஎம்ஆர்' தகவல்...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கடந்த 14 நாட்களில் 25 மாவட்டங்களில் புதிய கொரோனா பாதிப்பு இல்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வேண்டி பிரதமர் மோடியின் அறிவிப்புபடி நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தேவையின்றி மக்கள் வெளியே வருவது குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது ஆறுதலான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பு குறித்துப் பேசியுள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மருத்துவர் ராமன் ஆர் கங்ககேத்கர், "இதுவரை இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறியும் 2,06,212 சோதனைகளை நடத்தியுள்ளோம். மேலும் தற்போது தொடர்ந்து சோதனை செய்யும் அளவு அதிகரித்து வருகிறது. இதன் மூலம் அடுத்த 6 வாரங்களுக்கு எளிதாக சோதனைகளை நடத்த முடியும். அத்துடன் நாடு முழுவதும் உள்ள 15 மாநிலங்களில் இருக்கும்  25 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களில் எந்தவொரு புதிய கொரோனா பாதிப்பும் உறுதி செய்யப்படவில்லை" எனக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்