கொரோனா 'ஹாட் ஸ்பாட்' பட்டியலில் உள்ள 'தமிழக' மாவட்டங்கள் எவை?... மத்திய அரசு 'அறிவிப்பு'...
முகப்பு > செய்திகள் > இந்தியாதமிழகத்தில் 22 மாவட்டங்களை கொரோனா பாதிப்பு அதிகம் பரவியுள்ள மாவட்டங்களாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதுவரை 1242 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். 118 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்திலுள்ள 22 மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள இந்த ஹாட் ஸ்பாட் பகுதிகளில் கூடுதல் கவனம் எடுத்து மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் அதற்கான வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்டியலின்படி, சென்னை, திருச்சி, கோவை, நெல்லை, ஈரோடு, வேலூர், திண்டுக்கல், விழுப்புரம், திருப்பூர், தேனி, நாமக்கல், செங்கல்பட்டு, மதுரை, தூத்துக்குடி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, கடலூர், திருவள்ளூர், திருவாரூர், சேலம், நாகை ஆகிய தமிழக மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் தஞ்சை, திருவண்ணாமலை, காஞ்சி, சிவகங்கை, நீலகிரி, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட்களாக மாறலாம் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “மேலும் 25 பேருக்கு கொரோனா!”.. 15 பேர் பலி!.. பாதிக்கப்பட்டோர் 1267 ஆக உயர்வு!
- ‘உலக சுகாதார அமைப்பு மேல டவுட்டா இருக்கு.. அதனால!’.. ட்ரம்ப் எடுத்த ‘திடீர்’ முடிவு!... வறுக்கும் உலக நாடுகள்.. அட்வைஸ் பண்ணிய் ஐ.நா!
- 'தெம்பாக மீண்டு வரும் கேரளா'... ' வாவ் போட வைத்த பெண் மருத்துவர்களின் நடனம்'... வைரல் வீடியோ!
- 'தமிழகத்தில்' வங்கிகளின் 'வேலை' நேரத்தில் 'மீண்டும்' மாற்றம்... வெளியாகியுள்ள 'புதிய' அறிவிப்பு... 'விவரங்கள்' உள்ளே...
- '13வது ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பு!' .. 'கொரோனா தாக்கம் குறையாததால்' பிசிசிஐ அதிரடி!
- ‘இந்தியாவின் கோரிக்கையை ஏற்று’... ‘உலுக்கி எடுக்கும் கொரோனா நேரத்திலும்’... ‘ஒப்புதல் அளித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப்’
- 'எம்.எல்.ஏ.வை தாக்கிய கொரோனா'...'பரபரப்பான முதல்வர் அலுவலகம்'... தனிமைப்படுத்தி கொண்ட முதல்வர்!
- 'அமெரிக்காவை' இருளிலிருந்து 'இவர்' காப்பாற்றுவார்... முன்னாள் 'அதிபர்' பராக் ஒபாமா 'ஆதரவு'...
- 'நீங்க மன்னர் ட்ரம்ப் இல்ல... அதிபர் ட்ரம்ப் தான்!'... கடுப்பான கவர்னர்கள்!.. லாக் டவுன் விவகாரத்தில் வலுக்கும் எதிர்ப்பு!.. ட்ரம்ப்-இன் நிலைப்பாடு 'இது' தான்!
- 'கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிய அடுத்த நாடு!'.. கிடுகிடுவென உயர்ந்த பலி எண்ணிக்கை!.. 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு!