‘2-வது நாளாக கொரோனா பாதிப்பு இல்லை’... 'இந்தியாவில்'... 'மகிழ்ச்சியுடன் கூறிய 2 மாநிலங்கள்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் 2-வது நாளாக இரண்டு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படாதது நம்பிக்கை அளித்துள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்துள்ள நிலையில், இந்தியாவில் முதன் முதலில் கொரோனா தொற்று பதிவான கேரளாவில், கொரோனா பாதிப்பு கணிசமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்க எண்கள் அல்லது அதற்கு சற்றும் கூடுதலான எண்ணிக்கையிலேயே இருந்தது. நேற்று புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகவில்லை. இந்த நிலையில், 2-வது நாளாக கேரளாவில் இன்று புதிதாக கொரோனா நோய்த்தொற்று யாருக்கும் பதிவாகவில்லை என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கொரோனா பாதிக்கப்பட்ட 34 -பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒருநாளில் மட்டும் 61 பேர் குணமடைந்துள்ளனர். கேரளாவில் இதுவரை 499 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில், 462 பேர் குணமடைந்துள்ளனர். கேரளாவில் இதுவரை 4 பேர் மட்டுமே கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதேபோல், ஜார்கண்டிலும் 2-வது நாளாக யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. அங்கு மொத்தம் 115 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் புதிய உச்சம் தொட்ட கொரோனா!.. ஒரே நாளில் 527 பேருக்கு தொற்று உறுதி!.. என்ன காரணம்?.. சுகாதாரத்துறை பரபரப்பு தகவல்!
- 'மரணத்தை கண்ணு முன்னாடி பார்த்தேன்'... 'கொரோனா வார்டில் நடந்தது என்ன'?... 'இங்கிலாந்து பிரதமர் உருக்கம்'... டாக்டருக்கு செய்த கைமாறு!
- குக்கரை வைத்து மட்டையாவது எப்படி?.. ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த இளைஞர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!.. திருள்ளூரில் பரபரப்பு!
- சென்னை ஆவின் ‘பால்பண்ணை’ ஊழியர்கள் 2 பேருக்கு ‘கொரோனா’ தொற்று..! வெளியான அதிர்ச்சி தகவல்..!
- 'எச்சரித்தும் கேட்காமல்'... 'மாற்றி, மாற்றி கூறி'... 'தற்போது புதிய கணிப்பை வெளியிட்டு அதிர வைத்த ட்ரம்ப்'!
- 'லாக்டவுன்' தளர்த்தப்பட்டதும்... 'சீனர்களிடம்' அதிகரித்துள்ள 'ரிவென்ஜ்' ஸ்பென்டிங் பழக்கம்!... 'இந்தியர்களிடமும்' வருமா?...
- புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குத் திரும்பும் விவகாரம்!.. கொந்தளித்த பாஜக தலைவர்!.. களத்தில் இறங்கிய காங்கிரஸ்!.. என்ன நடந்தது?
- ‘ஊரடங்கு தளர்வுக்கு முன்’... ‘வழக்கத்தை விட’... ‘கடந்த 3 நாட்களில் மோசமான நிலைமை’!
- 'மதியம்' தூங்குவதால் 'இப்படியொரு' நன்மையா?... 'ஆச்சரியம்' தரும் ஆய்வு முடிவுகள்!...
- ஒரே மாவட்டத்தில் இன்று '107 பேருக்கு' கொரோனா... 'கோயம்பேடு' மார்க்கெட் மூலம் தொடர்ந்து 'உயரும்' பாதிப்பு...