அதிகரிக்கும் பாதிப்பு... புதிய கொரோனா 'ஹாட்ஸ்பாட்'களாக உருவெடுத்துள்ள மாநிலங்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இந்தியாவை பொறுத்தவரை தற்போது கொரோனா வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது. கடந்த 14 நாட்களில் மட்டும் சுமார் 1 லட்சம் பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளன. இந்தியாவின் மொத்த பாதிப்புகளில், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி மற்றும் குஜராத் ஆகிய 4 மாநிலங்களில் மட்டுமே 70 சதவீத பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் கடந்த சில நாட்களாக மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், பீகார் மற்றும் கர்நாடகா மாநிலங்களிலும் பாதிப்புகள் உயர்ந்துள்ளன.
இதேபோல் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் மற்றும் தமிழகத்தில் உயிரிழப்புகள் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகின்றன. இந்த 3 மாநிலங்களில் மட்டும் கடந்த வாரத்தில் 50-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் கடந்த சில வாரங்களாக, ஒவ்வொரு வாரமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.
இதேபோன்ற நிலை கடந்த 2 வாரங்களாக பீகாரிலும், கடந்த வாரத்தில் கர்நாடகா, அரியானா மற்றும அசாம் மாநிலத்திலும் காணப்படுகிறது. ஒடிசா, ஆந்திரா மற்றும் காஷ்மீர் மாநிலத்திலும் கடந்த சில நாட்களாக தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது மட்டுமின்றி மேற்கு வங்கத்தின் கூச் பெஹர், ராஜஸ்தானின் பரத்பூர் மற்றும் ஜலவார், உத்தரகண்ட்டின் டேராடூன் ஆகிய மாவட்டங்கள் புதிய கொரோனா ஹாட்ஸ்பாட்களாக உருவெடுத்துள்ளன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அப்ரைசலுக்கு வேட்டு வைத்த கொரோனா'... 'மாச சம்பளக்காரங்க, பேச்சிலர்ஸ் கவனத்திற்கு'... 'இந்த வருஷம் எப்படி'?... ரிசர்வ் வங்கி ஆய்வில் கணிப்பு!
- 'ஜார்ஜ் பிளாய்ட்' கொலை வழக்கில் 'திருப்பம்...' 'படுகொலைக்கு' பிந்தைய சோதனையில் 'கொரோனா உறுதி...' 'டாக்டர்கள்' தந்த 'அதிர்ச்சி ரிப்போர்ட்...'
- பணிச்சுமையால் உயிரிழந்த 'ஆம்புலன்ஸ்' டிரைவர்... கணவரின் 'இறுதி' சடங்கிற்காக... 'தாலி'யை அடகு வைத்த 'மனைவி'!
- 'முதல்வர்' காப்பீட்டு திட்டத்தின் கீழ்... தனியார் மருத்துவமனைகளில் 'கட்டணமின்றி'... கொரோனா சிகிச்சை பெறலாம்!
- இனிமே 'வீட்டுல' தனிமைப்படுத்த மாட்டோம்... கண்டிப்பா 'இங்க' தான் போகணும்: சென்னை மாநகராட்சி ஆணையர்
- 'இறப்பதற்கு' முன் அவருக்கு... பிரேத 'பரிசோதனை' அறிக்கையில்... வெளியான 'புதிய' தகவல்!
- 10-ம் வகுப்பு தேர்வுக்காக... 'சென்னை'யில் இருந்து 'கொடைக்கானல்' சென்ற மாணவிக்கு... 'காத்திருந்த' அதிர்ச்சி!
- "மேல டச் பண்ண கூடாது ஓகே!".. 'தனிமனித' இடைவெளியுடன் பயணிக்கும் 'குரங்கு!'.. வைரல் வீடியோ!
- "மறுபடியும் மொதல்ல இருந்தா?".. 'யூ-டர்ன் அடித்த உலக சுகாதார மையம்'.. அதிரடி அறிவிப்பு!
- 'எல்லாரும் மன்னிச்சிடுங்க'... 'ஜூம் வீடியோ காலில் மீட்டிங்'... 'கேமரா ஆன் ஆனது தெரியாமல் நடந்த பகீர் சம்பவம்'!