‘அபார்ட்மெண்டில்’ ஒருவருக்கு உறுதிசெய்யப்பட்ட ‘கொரோனா’... ‘பதறாமல்’ உடன் வசிப்பவர்கள் செய்த ‘காரியத்தால்’ தடுக்கப்பட்ட ‘ஆபத்து’...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பெங்களூரு அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பின் அங்கு வசிப்பவர்கள் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் நோய் தொற்று பரவாமால் தடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வசித்து வரும் பெண் ஒருவருக்கு வெளிநாடு சென்று திரும்பிய பின் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவரும் அனைவரும் சமூக அக்கறையுடன் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். அடுக்குமாடிக் குடியிருப்பை விட்டு யாரும் வெளியேறாத நிலையில், வெளியாட்கள் உள்ளே நுழைவதற்கும் அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த கட்டிட வளாகத்திற்குள் நடைபயிற்சி செய்பவர்கள் கூட மாஸ்க்குடன் தனித்தனியாக செல்வதுடன் மற்றவர்களுடன் பேசுவதையும் தவிர்த்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து அந்த அடுக்குமாடி குடியிருப்பிற்குள் மருத்துவர்கள், செவிலியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். கடந்த 12ஆம் தேதி முதல் தங்களை தனிமைப்படுத்திக்கொண்ட அவர்கள் 22ஆம் தேதி வரை இந்த தனிமைப்படுத்துதல் முறையாக கடைபிடிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். வெளியிலிருந்து வேலையாட்கள் கூட உள்ளே அனுமதிக்கப்படாத நிலையில், அவர்களுக்கான உணவு ஆகியவை தேவைக்கேற்ப ஏற்பாடு செய்யப்படுகிறது. மேலும் ஆன்லைனில் ஏதாவது ஆர்டர் செய்தாலும் டெலிவரி செய்ய வருபவர்கள் கேட் வரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

BENGALURU, CORONAVIRUS, APARTMENT, LOCKDOWN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்