‘கொரோனா’ அச்சுறுத்தலால்... ‘மார்ச் 31’ வரை அனைத்து பயணிகள் ‘ரயில்’ சேவை ‘ரத்து’... ‘விவரங்கள்’ உள்ளே...
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 31ஆம் தேதி வரை அனைத்து பயணிகள் ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் கோரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் நிலையில் இந்தியாவில் இதுவரை 324 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் 6 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் முன்னதாக மார்ச் 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படும் ரயில் டிக்கெட்டுகளுக்கு பிடித்தம் இருக்காது என ரயில்வே அறிவித்திருந்தது. அத்துடன் மார்ச் 21ஆம் தேதி முதல் ஜூன் 21ஆம் தேதி வரை ரத்து செய்யப்படும் ரயில் டிக்கெட்டுகளுக்கான கட்டணங்களை திரும்பப் பெறுவதிலும் சில சலுகைகள் அறிவிக்கப்பட்டன. அதன்பிறகு குறைந்த பயணிகளின் வருகையால் 100-க்கும் அதிகமான ரயில்களின் சேவைகள் நிறுத்தப்பட்டன.
இதையடுத்து தற்போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 31ஆம் தேதி வரை அனைத்து பயணிகள் ரயில் சேவைகளையும் ரத்து செய்வதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து சரக்கு ரயில்கள் மட்டும் வழக்கம்போல் இயங்கும் என்றும், புறநகர் ரயில்களும், மெட்ரோ ரயில்களும் இன்று இரவு வரை இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 13 மற்றும் மார்ச் 16 ஆகிய தேதிகளில் ரயில்களில் பயணித்த பயணிகள் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'காலம்காலமா நம்ம முன்னோர்கள் பண்ணிட்டு இருந்ததுதான்...' 'நச்சு கிருமிகள் எதுவும் வீட்டுக்குள்ள வராம இருக்க தெளிக்கிறோம்...' மஞ்சள் நீரை வாசலில் தெளிக்கும் கிராமத்து பெண்கள்...!
- இன்று நாடு முழுவதும் 'சுய ஊரடங்கு'...! 'கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க சோதனை முயற்சி...' வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவேண்டாம் என வலியுறுத்தல்...!
- ‘இத்தாலியில் கொரோனாவின் கோரம்’... ‘நிரம்பி வழியும் மருத்துவமனைகள்’... ‘உலகையே நடுங்க வைக்கும் இறப்பு எண்ணிக்கை’!
- ‘அவனுக்கு கொரோனா வந்துருச்சு’... ‘சக ஊழியர்கள் அனுப்பிய வீடியோவால்’... 'இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்'!
- கொரோனா ‘செக் அப்’!.. பயந்து பாத்ரூமில் ஒளிந்தாரா பாலிவுட் பாடகி?.. வெளியான பரபரப்பு தகவல்..!
- 'ஆபீஸ்ல லீவு கொடுக்கல'... 'வாட்ஸ்ஆப்' மூலம் இளைஞர்கள் செய்த கொடூரம்'...சென்னையை கலங்கடித்த பீதி!
- ‘யாரும் வீட்டைவிட்டு வெளிய வரக்கூடாது’.. ‘மீறினால் கடும் அபராதம்’.. முதல்முறையாக பவாரியாவில் லாக்டவுன் உத்தரவு..!
- ‘கொரோனா’ பாதித்த பாலிவுட் ‘பாடகியுடன்’... ‘பார்ட்டியில்’ பங்கேற்ற... அரசியல், ‘சினிமா’ பிரபலங்கள் ‘கலக்கம்’... ‘பரபரப்பு’ சம்பவம்...
- ‘சீனா’ பண்ண ‘அதே’ தவறை ‘இவங்களும்’ பண்றாங்க... பாதிப்பு ‘அதிகமாக’ அதுதான் காரணம்... சீன மருத்துவர்கள் ‘கவலை’...
- ‘கொரோனா’ அறிகுறியால் பயந்து... மகனை ‘வீட்டில்’ தனிமைப்படுத்தாமல்... ‘ரயில்வே’ அதிகாரியான தாய் செய்த ‘அதிர்ச்சி’ காரியம்... பாதிப்பு உறுதியானதால் ‘பரபரப்பு’...