'கொரோனாவை' கட்டுக்குள் கொண்டுவர... '123 ஆண்டுகள்' பழமையான சட்டம்... எதெல்லாம் 'செய்யக்கூடாது' தெரியுமா?
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு 123 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், 1897-ம் ஆண்டு, பிப்ரவரி 4-ம் தேதி இயற்றப்பட்ட ஒரு சட்டம் தற்போது உதவுகிறது. அந்த சட்டம்தான் 'தொற்றுநோய்கள்' சட்டம் ஆகும். இந்த சட்டம், மாநில அரசுகளுக்கு சிறப்பு அதிகாரங்களை தந்துள்ளது. பிளேக் நோயை கட்டுப்படுத்துவதற்காக இந்த சட்டம் அந்தக் காலத்தில் கொண்டு வரப்பட்டது. மாறும் காலத்துக்கு ஏற்ப இந்த சட்டத்திலும் தற்போது பல திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
தமிழகம், கர்நாடகம், மஹாராஷ்டிரா, ஹரியானா, டெல்லி, கோவா என பல்வேறு மாநிலங்களும் இந்த சட்டத்தை பயன்படுத்தி தான் கொரோனா பரவலை கட்டுப்படுத்தி வருகின்றன. இதன் கீழ் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க முடியும். நிறுவனங்கள் இயங்குவதை முடக்கவும், பள்ளிகளை மூடவும், வீடுகளில் இருந்து வேலை செய்யவும் வழிவகுத்து தந்திருக்கிறது.
எல்லைகளை மூடல், வாகன போக்குவரத்துகளை தடை செய்தல், பொதுமக்கள் கூடுவதை தடை செய்தல் போன்ற நடவடிக்கைகளுக்கும் இந்த சட்டம் உதவுகிறது. இந்த சட்டத்தின்படி பிறப்பிக்கப்படுகிற உத்தரவுக்கு யாரும் பணிந்து நடக்காவிட்டால் அவர்களை இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 188-ன் கீழ் தண்டிக்கவும் முடியும். இந்த சட்டத்தின்படி செயல்படுத்துகிற எந்தவொரு நடவடிக்கைக்கும் அல்லது எந்தவொரு அதிகாரிக்கும் எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "டிரைவர் அண்ணே...!" "தம்பிக்கு உங்க சீட்ல பாதி இடம் குடுங்கண்ணே..." 'சொந்த ஊருக்கு' போக முட்டி மோதிய 'இளைஞர்கள்...' '2 நாட்களில்' பயணம் செய்தவர்களின் 'அசர வைக்கும்' எண்ணிக்கை...
- 'கொரோனா' என்னும் 'பயோ வெப்பனை'.... திட்டமிட்டு பரப்பியது 'சீனா'... '20 லட்சம் கோடி' நஷ்டஈடு கோரி 'அமெரிக்கா வழக்கு'... 'உலக நாடுகள் ஆதரவு...'
- போதும் ‘லாக் டவுன்’ எல்லாம்... ‘60 வயசுக்கு’ மேலதான் ‘ஆபத்து’... மத்தவங்க ‘வேலைக்கு’ போங்க... ‘அதிபர்’ கருத்தால் பெரும் ‘சர்ச்சை’...
- 'செய்தித்தாள்கள்' மூலம் 'கொரோனா' பரவுமா?... 'மருத்துவர்கள்' கூறுவது 'என்ன?...' 'உலக' சுகாதார அமைப்பு 'விளக்கம்'...
- 'மளிகை சாமான்' கொடுக்க முடியாது... வீட்டை 'காலி பண்ணுங்க'... 'ஹாஸ்பிட்டல் போங்க...' 'கிட்ட வராதிங்க...' 'ஊரே' சேர்ந்து ஒதுக்கிய 'விமான பணிப்பெண்...'
- 'ஸ்பெயினில்' முதியோர் இல்லத்தில் 'வீசிய துர்நாற்றம்' ... 'கிருமி நாசினி' தெளிக்கச் சென்ற 'ராணுவ வீரர்கள்'... உள்ளே 'உயிரை' உறைய வைக்கும் 'பேரதிர்ச்சி'...
- 'எப்படி இங்க மட்டும் கொரோனாவின் பருப்பு வேகல'... 'ரஷ்யாவின் மாஸ்டர் பிளான்'... வெளிவந்த தகவல்கள்!
- 'நாட்டுல என்ன பிரச்சனை நடக்குது'...'சாலையில் இளம் பெண்கள் செஞ்ச செயல்'...வைரலாகும் வீடியோ!
- 'டாக்டர் மாப்பிள்ளைதான்' வேணும்னு 'சொன்னவங்க' எல்லாம்... இப்போ 'வீட்டை' காலி பண்ண 'சொல்றாங்க'... 'இது ரொம்ப தவறுங்க'... 'கண்டித்த மத்திய அமைச்சர்'...
- 'வெளிநாட்டுல' இருந்து 'காப்பாத்துங்கன்னு' சொன்னவங்க எல்லாம்... இப்போ 'ஊட்டிக்கு டூர்' வந்த மாதிரி 'சுத்துறாங்க'... 'பொறுத்து பொறுத்துப்' பார்த்த 'போலீஸ்' செய்த 'காரியம்'...