‘இந்தியாவில்’ கொரோனாவால் மேலும் ஒருவர் ‘பலி’... ‘ஊரடங்கு’ காலத்தை ‘நீட்டித்து’ மாநில அரசுகள் ‘புதிய’ உத்தரவு...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் குஜராத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குஜராத் மாநிலம் சூரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 69 வயது முதியவர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். இதன்மூலம் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக நாடு முழுவதும் இன்று ஒருநாள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் தற்போது பல மாநில அரசுகள் ஊரடங்கு காலத்தை நீட்டித்து உத்தரவிட்டுள்ளன.

தமிழகத்தில் இன்று இரவு 9 மணியுடன் நிறைவு பெற இருந்த ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தில் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் அறிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் ஊரடங்கு நாளை காலை 6 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று நள்ளிரவு 12 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இன்று இரவு 9 மணியிலிருந்து மார்ச் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்திலும் நாளை காலை வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டில் இருந்து வரும் எந்த விமானமும் அம்மாநிலத்திற்குள் தரையிறங்க அனுமதியில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

பஞ்சாப் அரசு மக்கள் ஊரடங்கை வரும் 31ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

CORONAVIRUS, TN, SECTION 144, JANATA CURFEW, EXTENDED

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்