‘ஊரடங்கை மீறி வெளில வந்துராதீங்க!’... ‘அப்புறம் 14 நாள் இந்த தண்டனைதான்!’.. ‘அல்லு’ கிளப்பும் மத்திய அரசின் உத்தரவு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியா முழுவதும் ஆட்கொல்லி நோயான கொரானா வைரசை தடுக்கும் விதமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிரதமர் மோடியால் பிறப்பிக்கப்பட்டது.

இதனை அடுத்து இந்தியா முழுவதும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற பொழுதுபோக்கு உள்ளிட்ட அம்சங்களுக்கு தற்காலிகமாக பூட்டு போடப்பட்டது.

எனினும் நகரங்களில் வசிக்கும் பல மக்கள் இந்த கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் தத்தம் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்கிற முனைப்பில் பேருந்து நிலையத்தில் குவிந்து மேலும் பரபரப்பை ஏற்படுத்தினர்.

இதைத்தவிர நகரங்களில் மிகவும் கண்டிப்புடன் ஊரடங்கு உத்தரவை பின்பற்ற சொல்லி மத்திய அரசு கடும் அளவில் எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனாலும் இந்த எச்சரிக்கைகளை மீறி பல புள்ளிங்கோக்கள் அங்கும் இங்குமாக சுற்றி திரிந்ததால் போலீசாரிடம் சிக்கி நல்ல கவனிப்பையும் பெற்றனர். இதனால் இப்போதைக்கு வெளியில் நடமாடுபவர்களின் எண்ணிக்கை ஓரளவு குறைந்து என்று சொல்லலாம். 

நடிகர் நடிகைகளும் சமூக ஆர்வலரும் மருத்துவர்களும் இந்த கொடிய வைரஸை விரட்டுவதற்கான மிக முக்கியமான வழிமுறைகளாக அரசு முன்வைக்கும் சமூக விலகல,  சமூக இடைவெளி மற்றும் தனிமைப்படுத்தப்படுதல் போன்றவற்றை பின்பற்றச்சொல்லி ஆலோசனை கூறி வரும் நிலையில் மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவை மீறி வேறு இடங்களுக்கு செல்ல முயற்சிப்பவர்கள் 14 நாட்கள் அரசு முகாம்களில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று புதிய அறிவிப்பு ஒன்றை விடுத்திருக்கிறது. இதை மத்திய அரசு கடும் எச்சரிக்கையாக முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

CORONA, CORONAVIRUS, CORONAINDIA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்