"இது ரொம்ப பலவீனமா இருக்கு..." "மரபணுவில் வேறுபாடு இருக்கிறது..." "32 டிகிரி வெயிலில் அழிந்து விடும்..." 'நம்பிக்கை' தரும் 'மருத்துவர்...'
முகப்பு > செய்திகள் > இந்தியா32 டிகிரி வெயிலில் கொரோனா அழிந்து விடும் என்பதால் கொரோனா வைரசால் மக்கள் பீதி அடைய வேண்டாம் என ஹைதராபாத் மருத்துவர் டாக்டர் நாகேஷ்வர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இதுவரை 1139 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 27 பேர் வரை பலியாகி உள்ளனர். மஹாராஷ்ட்ரா, கேரள மாநிலத்தில் தான் அதிகமான பாதிப்பு இருக்கிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இந்த நிலையில் கொரோனா வைரசால் மக்கள் பீதி அடைய வேண்டாம், இதைக் கட்டுப்படுத்த முடியும் என்று ஹைதராபாத் மருத்துவர் ஒருவர் தெரிவித்து உள்ளார். ஆசிய இரப்பை குடலியல் அமைப்பின் தலைவரும், ஹைதராபாத் மருத்துவருமான டாக்டர் நாகேஷ்வர் ரெட்டி இதுதொடர்பாக கூறியதாவது, "நாங்கள் இந்த வைரஸ் குறித்து ஆய்வு செய்தோம். இது ஆர்.என். ஏ. வகையைச் சேர்ந்த வைரஸ் ஆகும். இந்த வைரஸ் வலுவாக இருக்கும்போதே பரவத்தொடங்கியது. சீனாவில் தோன்றிய போதும், மற்ற நாடுகளுக்கு பரவ தொடங்கியபோதும் அதன் மரபணு மாறியதை நாங்கள் கண்டறிந்தோம்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சீனா, இத்தாலி, அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள இந்த வைரசின் மரபணுவுக்கும், இந்தியாவில் உள்ள வைரஸ் மரபணுவுக்கும் வேறுபாடு இருக்கிறது. 'ஸ்பைக்' புரதத்தில் மாறுபாடு இருக்கிறது. அங்கு வலுவாக இருந்தது. இந்தியாவில் பலவீனமாக இருக்கிறது.
இத்தாலி, சீனா, அமெரிக்காவில் பரவிய வைரஸ் வீரியம் மிக்கதாக இருந்ததால் அதிகமான பாதிப்பு இருந்தது. மேலும் இத்தாலியில் 70 வயதுக்கு மேற்பட்டவர்களே இறந்தனர். அவர்கள் பெரும்பாலும் ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள்.
இந்தியாவில் உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது. இந்த வைரஸ் பலவீனமானது என்பதால் மக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம். கொரோனா வைரஸை நம்மால் கட்டுப்படுத்த முடியும். இந்தியாவில் இந்த வைரஸ் தொற்று அதிகமாக இருக்காது.
இந்தியாவில் ஏப்ரல் மாதம் சராசரியாக 32 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருக்கும். இந்த வெப்பத்திற்கு கொரோனா வைரஸ் நீண்ட நாள் இருக்காது. இதனால் நாம் அதை கட்டுப்படுத்திவிடலாம். 21 நாள் ஊரடங்கு உத்தரவுக்கு பிறகு நீட்டிப்பு இருக்காது என்றே என்னுடைய கணிப்பாகும்." எனத் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘அவங்கள நாங்க பாத்துக்குறோம்!’.. பவன் கல்யாணின் கோரிக்கைக்கு மின்னல் வேக ‘ரியாக்ஷன்’.. ‘அதிரடி’ காட்டிய தமிழக முதல்வர்!
- VIDEO: “நில்லு.. கொரோனாவ இங்கயே ஒழிச்சு கட்டிட்டு வீட்டுக்குள்ள வா!”.. ‘வெளிய போய்ட்டு வந்த பெண்ணை வித்யாசமாய் டீல் பண்ணனும் குடும்பம்!’.. ‘வைரல் வீடியோ!’
- 'உலக சுகாதார மையத்தையே அதிரச் செய்த மாஸ்க்...' 'அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு சவால்...' "இதைதாண்டி கொரோனா உள்ள போயிடுமா?..." 'யாருகிட்ட...!'
- ‘2 வாரத்தில் 100 படுக்கைகள் கொண்ட ஹாஸ்பிட்டல்’.. ‘WorkFromHome பார்ப்பவர்களுக்கு ஜியோ மூலம்..!’.. வெளியான அதிரடி அறிவிப்பு..!
- “ரீசார்ஜ் பண்லனாலும் ஏப்ரல் 20 வரை சேவை துண்டிக்கப்படாது!” - ‘பிரபல நெட்வொர்க்கின் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி!’
- 'நான்கே நாளில் ஐந்திலிருந்து 7 லட்சமாக உயர்வு..'. 'அதிர்ச்சியை' ஏற்படுத்தும் 'வேகம்...' 'முன்பை' விட 'தீவிரமானது' தாக்கம்...
- "கொரானாவுக்கு எதிரான முயற்சிகளுக்கு முதல்வருக்கு நன்றி!" .. ‘பொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி அளித்த சக்தி மசாலா நிறுவனம்!’
- ‘என் ஏரியால 15 பேருக்கு கொரோனா இருக்கு!’.. ‘வாட்ஸ்-ஆப்பில் வந்த தகவல்.. பெண் செய்த பரபரப்பு காரியம்!’
- 'என் பிள்ளைங்க அவங்க 'அப்பா' முகத்த கடைசியா ஒருதடவ பார்க்க முடியலயே!'... துபாயில் மரணமடைந்த கணவர்!... கொரோனா எதிரொலியால்... இதயத்தை ரணமாக்கும் துயரம்!
- 'தம்' அடிப்பவர்களை 'கொரோனா' தொற்றுமா? 'ஆய்வு' முடிவுகள் சொல்வது 'என்ன?'... 'ஷாக் ரிப்போர்ட்?...'