'லாபம்' எதுவும் எங்களுக்கு வேணாம் ... 'மக்களோட' நலன் தான் முக்கியம் ... கேரளாவில் பிரபலமான இரண்டு ரூபாய் 'மாஸ்க்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக முகக் கவசங்கள் விலை உயர்ந்து வரும் நிலையில், கேரளாவில் ஐந்தாயிரம் முகக்கவசங்களை தலா 2 ரூபாய்க்கு மருந்துக் கடை ஒன்றில் விற்பனை செய்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து கிட்ட தட்ட 100 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியா முழுவதும் முக கவசங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் முக கவசங்கள் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. முதன்மையான எண்.95 கவசம் 200 ரூபாய் வரையிலும், மூன்று அடுக்கு முகக்கவசம் 50 ரூபாய் வரையிலும், சாதாரண முகக்கவசம் 30 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கேரள மாநிலம் கொச்சியில் மருந்துக் கடை ஒன்றில் முகக்கவசம் ஒன்றினை 8 முதல் 10 ரூபாய்க்கு கொள்முதல் செய்து 2 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். கடந்த எட்டு ஆண்டுகளாக இது போன்று விற்பனை செய்து வருவதாகவும், இதன் மூலம் சிகிச்சை பெறுவோர், சாதாரண மக்கள் உட்பட பலர் பயனடைவார்கள் என மருத்துவமனையின் உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில், குறிப்பாக கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவலாக உள்ள நிலையில், லாபத்தை எதிர்பார்க்காமல் மக்களுக்காக சேவை செய்து வரும் மருந்து கடையை பொது மக்கள் பாராட்டி வருகின்றனர்.

KERALA, CORONA VIRUS, CORONA VIRUS MASK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்