'இத்தாலியை' புரட்டிப் போட்ட 'கொரோனா'...பலி எண்ணிக்கையில் 'சீனாவை' 'மிஞ்சியது'...'உலகப் போரை' விட 'மோசமான' நிலை...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனாவால் உலக அளவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக சீனா இருந்து வந்தது. ஆனால் தற்போது சீனாவை பின்னுக்குத் தள்ளிவிட்டு இத்தாலி அந்த இடத்தை பிடித்துள்ளது.

உலக நாடுகளை உலுக்கி எடுத்தும் கொரோனா தற்போது ஐரோப்பிய நாடுகளை பதம் பார்த்து வருகிறது. குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளாக உள்ளன.

இதில் இத்தாலி நாட்டில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. நாளுக்கு நாள் அங்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பலி எண்ணிக்கையும் ஒவ்வொரு நாளும் நூற்றுக் கணக்கில் உள்ளது.

சீனாவில் இதுவரை 80,928 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், அங்கு மொத்தம் 3,245 பேர் பலியாகி இருந்தனர். இத்தாலியில் இதுவரை 41,000 பேர் பாதிக்கப்பட்டிருந்தாலும் அந்நாட்டில் பலி எண்ணிக்கை 3,405 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் கொரோனா பலி எண்ணிக்கை இத்தாலியில் சீனாவைக் காட்டிலும் அதிகமாகியுள்ளது. இறப்பு விகிதமும் அங்கு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அங்கு, நேற்று முன்தினம் மட்டும், 475 பேர், இந்த வைரசால் உயிரிழந்து உள்ளனர்.

ஆறு கோடி பேர் மக்கள் தொகை கொண்ட இத்தாலியில், மார்ச், 12 முதல், முழு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தற்போது அங்கு உலகப்போரை விட மோசமான நிலை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CORONA, COVID 19, ITALY, CHINA, DEATH TOLL, INCREASE ITALY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்