'கடந்த 24 மணி நேரத்தில்...' 'இந்தியாவில் அதிகரித்த உயிரிழப்பு...' ஊரடங்கை நீட்டிக்க கோரிக்கை விடுத்த மாநிலம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 32 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவிய  கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவி வருகிறது. கொரோனா  வைரஸ் உலகம் முழுவதும் 1,431,973 பேரை பாதித்துள்ள நிலையில் கிட்டத்தட்ட 82,096 பேர் இந்த வைரசால் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 35 பேர் உயிரிழந்த சம்பவம் மக்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸின் பரவலை தடுக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி 21 நாள் ஊரடங்கு உத்தரவை இந்தியா முழுவதும் பிறப்பித்திருந்தார். இந்நிலையிலும் கொரோனா வைரஸின் பரவல் அதிகரித்து கொண்டே தான் உள்ளது என்பது கவலைப்பட வேண்டிய நிகழ்வாக உள்ளது.

இந்தியாவில் மட்டும் இதுவரை சுமார் 5356 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 468 பேர் சிகிச்சை பெற்று முழு உடல் ஆரோக்கியத்துடன் வீடு திரும்பியுள்ளனர். ஆனால் இறப்பு எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இந்தியாவில் கொரோனா பாதித்த மாநிலங்களின் பட்டியலில் முதல் இடத்தில் மகாராஷ்டிரா மாநிலம் இருக்கிறது. இங்கு இதுவரை சுமார் 1018 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாம் இடத்தில் உள்ள தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 690 பேர் பாதிப்படைந்துள்ளனர். 576 கொரோனா பாதித்தவர்களை கொண்டுள்ள டெல்லி மூன்றாம் இடத்தில் உள்ளது.

கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க, தெலுங்கானா மாநிலம் 21 நாள் ஊரடங்கை மேலும் நீடித்து ஜூன் 3 ஆம் தேதி வரை மாற்ற நேற்று மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அதை தொடர்ந்து அசாம் மற்றும் சத்தீஸ்கர் மாநில அரசுகளும் தங்களது எல்லைகளை தொடர்ந்து மூட முடிவெடுத்துள்ளதாக அறிவித்திருந்தது

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்