இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்தின் விலை என்ன?.. எப்போது கிடைக்கும்?.. பிற நாடுகளில் 'இது' தான் நிலவரம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உலகின் பல நாடுகளில் கொரோனா தடுப்பு மருந்து கிடைப்பதற்கான முன்னேற்பாடுகளை உலக சுகாதார அமைப்பு செய்து வருகிறது. அந்த அமைப்பைப் பொருத்தமட்டில், பரிசோதனை நிலையிலான 34 நிறுவனங்களின் ஆராய்ச்சி, தற்போது மூன்றாவது கட்டத்தை எட்டியுள்ளது.

அதே சமயம், மூன்று நிறுவனங்கள் மட்டும் இரண்டாவது கட்ட பரிசோதனை நிலையை எட்டியுள்ளன. இதேபோல, 142 நிறுவனங்களும் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் பரிசோதனைக்கு முந்தைய நிலையை எட்டியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

அந்த அமைப்பின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் கூறுகையில், ஆகஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியுடன் இணைந்துள்ள அஸ்ட்ராஸெனெக்கா நிறுவனம், மிகவும் மேம்பட்ட தடுப்பு மருந்தை இதுவரை இல்லாத வகையில் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவி்த்தார்.

கொரோனா வைரஸ் தடுப்பூசி விலை எவ்வளவு?

அஸ்ட்ராஸெனேக்கா தடுப்பூசி (பிரிட்டன்)

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்களின் ஆதரவுடன் தயாரிக்கப்படும் இந்த தடுப்பூசி, அஸ்ட்ராஸெனேக்கா என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. குறைந்த விலையில் அந்த தடுப்பூசி விற்கப்படுவதாக இருந்தாலும், அதில் ஓரளவு லாபத்தை வைத்தே அந்த நிறுவனம் விற்பனையை செய்யும்.

கடந்த மாதம் அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி, மெக்ஸிகோவில் பேசும்போது, லத்தீன் அமெரிக்காவில் தடுப்பூசி விலை ஒரு டோஸ் அளவுக்கு நான்கு டாலர்களுக்கு குறைவாக இருக்கும் என்றார்.

சீரம் தடுப்பூசி (இந்தியா)

இந்தியாவின் புனேவில் உள்ள சீரம் நிறுவனம், மிகப்பெரிய அளவில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அந்த நிறுவனம், இந்தியா மற்றும் வளர்ந்த நாடுகளில் வைரஸ் தடுப்பூசி விலையை சுமார் மூன்று டாலர்கள், அதாவது சுமார் 220 ரூபாய் அளவுக்கு விற்க இருப்பதாகத் தெரிகிறது.

மேலும், இத்தாலி சுகாதார அமைச்சகம், ஐரோப்பாவில் வைரஸ் தடுப்பூசி விலை 2.5 யூரோக்களுக்கு விற்பனையாகலாம் என மதிப்பிட்டுள்ளது.

அஸ்ட்ராஸெனெக்கா நிறுவனத்துடன் அதன் வைரஸ் தடுப்பு மருந்தை வாங்க ஆஸ்திரேலியா கடந்த மாதம் ஒப்பந்தம் செய்தது.

அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன், தமது நாட்டில் அனைத்து குடிமக்களுக்கும் வைரஸ் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

ஆனாலும், அந்த வைரஸ் தடுப்பூசிக்கு அரசு எவ்வளவு தொகையை வழங்கும் என்பது இன்னும் தெளிவாகவில்லை.

சனோஃபி தடுப்பூசி (பிரான்ஸ்)

பிரான்ஸில் இருந்து செயல்பட்டு வரும் சனோஃபி நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஒலிவியர் போகிலோட், தமது நிறுவன வைரஸ் தடுப்பு மருந்து ஒரு டோஸ் விலை 10 இயோரோக்களுக்கு (இந்திய ரூபாய் மதிப்பில் 900) குறைவாக இருக்கும் என்றார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்