‘கிங் காங்’.. ‘ஜிஜோ மோடி’.. ‘கொரோனா தாமஸ்’... “பேரே ஓட்டு வாங்கி ஜெயிக்க வெச்சுரும் சாரே!” - வைரலாகும் ‘கேரள நாட்டின் வேட்பாளர் பெயர்கள்!’
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் டிசம்பர் 10-ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் தொடங்கப்படவிருக்கிறது.
இந்நிலையில் அங்கு பிரச்சாரம் களைகட்டத் தொடங்கியதை அடுத்து, வித்தியாசமான பெயர்களுடன் வேட்பாளர்கள் சாலையில் வலம்வருவதும், மக்களிடம் வாக்குக் கேட்பதும் வைரலாகி வருகிறது. 3 கட்டங்களாக கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. டிசம்பர் 8-ம் தேதி முதல் கட்டத் தேர்தல், 2-ம் கட்டம் 10-ம் தேதியும், 3-ம் கட்டம் 14-ம் தேதியும், 16-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது.
இந்தத் தேர்தலில் மொத்தம் 36,305 பெண் வேட்பாளர்கள், ஒரு மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 74,899 வேட்பாளர்கள் கேரள களத்தில் உள்ளனர். இவர்களுள் பிரேசிலியா, லுக்மேன், கொரோனா தாமஸ், ஜிஜோமோடி என வித்தியாசமான பெயர்களுடன் வலம் வரும் வேட்பாளர்கள் வைரலாகி வருகின்றனர்.
மராரிகுளம் பஞ்சாயத்தில் போட்டியிடுகிறார், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 57 வயது வேட்பாளர் கே.கிங் காங் எனும் வேட்பாளர். கோழிக்கோடு கயன்னா கிராமத்தில் போட்டியிடுகிறார் பாஜக வேட்பாளர் ஜேபி 77 என்பவர், பத்தினம்திட்ட மாவட்டத்தில் மலையாளப்புழா பஞ்சாயத்தில் போட்டியிடுகிறார் ஜிஜோ மோடி எனும் பத்திரிகையாளராக இருந்து அரசியலுக்குள் நுழைந்தவர்.
பாஜக சார்பில் கொல்லம் மாநகராட்சியில், மதிலில் வார்டியில் போட்டியிடுகிறார் கொரோனா தாமஸ். கொரோனா தாமஸின் சகோதரி கோரல். இருவருக்கும் இவர்களின் தந்தை இவர்கள் பிறந்ததுமே இப்படி பெயர் வைத்துள்ளார். இதில் கோரோனா தாமஸ்க்கு கொரோனா வைரஸ் தொற்று இடையில் ஏற்பட்டபோது, ‘கொரோனாவுக்கு கொரோனா வந்துவிட்டது’ என கேரளத்தில் செய்திகள் பரவின.
கொரோனா வைரசுடன் மக்கள் போராடிக்கொண்டிருக்கும் இந்நிலையில் தன் பெயரே தன்னை தனித்துவமாக மக்களிடம் நிலைக்கச் செய்து, வாக்குகளை பெற்று வெற்றியை ஈட்டித்தரும் என நம்புகிறார் கொரோனா தாமஸ்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "வரப்போகிற சட்டமன்ற தேர்தலில்"... "அற்புதம்... அதிசயம்... நிகழும்!".. அரசியல் கட்சி தொடங்குவது குறித்து... நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு கருத்து!
- அரசியலையும் ஒரு கை பார்த்திடுவோம்...! 'கேரள அரசியலில்...' - 'புயலென' களம் இறங்கியுள்ள இளம்பெண்கள்...!
- 'இனிமேல் ரூம் தேடி அலைய தேவையில்ல...' 'ஹாயா பஸ்லயே படுத்துக்கலாம்...' 'ஒரு நாளைக்கு ரூ.100 வாடகை...' - மூணாறில் கலக்கும் லாட்ஜ் பஸ்...!
- கமல் கட்சியில் இணைந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி!.. இணைந்த உடனேயே பொதுச்செயலாளர் பதவி!.. யார் இவர்?
- 'ரஜினியைத் தொடர்ந்து கமல்'... சூடு பிடிக்கும் தமிழக அரசியல்?.. மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
- "தோல்வி அடைய விரும்பவில்லை!!!"... 'உணர்ச்சிபூர்வமான பேச்சால் கண்கலங்கிய நிர்வாகிகள்?!!'... 'கட்சி தொடங்குவது குறித்து ரஜினிகாந்த் அதிரடி!'
- நோட்டாவுக்கு அதிக ‘ஓட்டு’ விழுந்தால் தேர்தலை ரத்து செய்யணும்.. பாஜக மூத்த தலைவர் உச்சநீதிமன்றத்தில் மனு..!
- அரசியல் குறித்த முடிவா...? 'ரஜினிகாந்த் நிர்வாகிகளுடன் ஆலோசனை...' - வெளியான பரபரப்பு தகவல்...!
- 'இது விவாதம் இல்ல.. நாட்டின் இப்போதைய தேவையே இதுதான்!'.. தேர்தல் தொடர்பாக பிரதமர் மோடியின் புதிய ‘கொள்கை!’
- 'இன்னும் எங்களால நம்பவே முடியல...' 'கால்பந்து விளையாட்டின் மேதை மரடோனாவிற்கு...' - கேரள அரசு அளித்துள்ள மரியாதை...!