கொரோனா பாதித்தவர்கள் தும்மினால், பேசினால் நோய் பரவுமா..? மத்திய சுகாதாரத்துறை ‘புதிய’ வழிகாட்டு நெறிமுறை வெளியீடு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பேசினால், தும்மினால் நோய் பரவ வாய்ப்புள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதுவரை 2 லட்சத்துக்கு 70 ஆயிரத்துக்கும் அதிகமானொர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் தும்மினால், பேசினால் நோய் பரவுவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவும் என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் தும்மிய பின் அல்லது இருமிய பின் அவரது எச்சிலின் சிறிய துகள்கள் காற்றில் பரவி இருந்தால், அதை சுவாசிப்பவர்களுக்கும் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.
வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் தும்மும் போதும் அல்லது இருமும் போதும், பேசும் போதும் அவரிடம் இருந்து வெளிப்படும் எச்சிலின் பெரிய துகள்கள் 2 மீட்டர் தூரத்துக்குள் கீழே விழுந்துவிடும். ஆனால் ஏரோசோல் ( Aerosols) என்ற எச்சிலின் சிறிய துகள்கள் காற்றில் 10 மீட்டர் தூரம் வரை பரவும். இந்த ஏரோசோல்கள் அதிக நேரம் உயிருடன் இருக்கும். காற்றில் இருந்து ஏரோசோல்கள் விழுந்த இடத்தை ஒருவர் தொட்டுவிட்டு தனது மூக்கையோ, கண்களையோ தொட்டால் அவர் வைரஸால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், மூடப்பட்ட இடங்கள், காற்று வசதி இல்லாத இடங்கள் போன்ற இடங்களில் இந்த ஏரோசோல்கள் விழுந்தால் வைரஸ் தொற்று வேகமாக பரவும். அதனால் வைரஸ் பரவலை தடுக்க அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிப்பதுடன் கிருமிநாசினிகளை பயன்படுத்தி கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
முக்கியமாக நல்ல காற்றோட்டம் உள்ள பகுதிகளில் மக்கள் இருப்பது நல்லது. காற்றோட்டம் உள்ள பகுதிகளில் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் வீடுகளில் ஜன்னல்களை திறந்து காற்றோட்டமாக வைத்திக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஒவ்வொரு தடவையும் நடக்குற மாதிரி போய் கடைசியில நின்னுடுது...' 'இந்த தடவ எப்படியாச்சும் பண்ணிடனும்...' - திருமணம் செய்வதற்காக இளைஞர் எடுத்த ரிஸ்க்...!
- மூன்றாம் அலை வேற உருவாகுமான்னு தெரியலையே...! 'வொர்க் ஃப்ரம் ஹோம்' தொடர்பாக 'பிரபல' நிறுவனங்கள் எடுத்துள்ள முக்கிய முடிவு...!
- 'கத்திரிக்கா, வால் மிளகு' சேர்த்து கொரோனாவுக்கு மருந்து கண்டுப்பிடிச்சிட்டதா வீடியோ போட்ட நபர்...' 'தற்போது ஐ.சி.யு-வில் அட்மிட்...' - இவர நம்பி 'அத' வாங்கி 'யூஸ்' பண்ணவங்க நிலைமை என்ன தெரியுமா...?
- 'தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் மாஸ்க் போட வேண்டாம்'... 'அதிரடியாக அறிவித்த நாடு'... உற்சாகத்தில் மக்கள்!
- 'இந்த நாடுகளுக்கு எல்லாம் போக வேண்டாம்'... 'லிஸ்டில் இருக்கும் நாடுகள்'... அமெரிக்கா எச்சரிக்கை!
- 'எங்க கம்பெனியில வொர்க் பண்றவங்க...' 'யாராச்சும் கொரோனாவால இறந்துட்டாங்கன்னா...' 'அவங்களோட 60 வயது வரை முழு சம்பளத்தை கொடுப்போம்...' - சலுகைகளை அறிவித்த 'பிரபல' கம்பெனி...!
- கரெக்ட்டா கண்டுப்பிடிச்சிடுது...! 'ஆள் பக்கத்துல போனாலே கொரோனா இருக்கா? இல்லையான்னு சொல்லிடும்...' எப்படி கண்டுப்பிடிக்குது...? - ஆராச்சியாளர்கள் தகவல்...!
- நாங்க 'விசாரணைய' இன்னும் தீவிரப்படுத்துவோம்...! 'எங்களுக்கு எந்த சந்தேகமும் கிடையாது...' கொரோனா 'அங்க' இருந்து தான் பரவிச்சு...! - அமெரிக்க உளவுத்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்...!
- பறந்து பறந்து கல்யாணம்...! 'விமானத்தை கல்யாண மண்டபமாக்கிய ஜோடி...' - எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் விமான ஊழியர்களுக்கு கெடச்ச 'ஷாக்' தகவல்...!
- முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு Martin Group உதவி!