'எதிர்ப்புசக்தி கூட இத்தனை மாதங்கள்தான் இருக்கும்'... 'அதிர்ச்சி தகவலுடன்'... 'ICMR விடுத்துள்ள மிக முக்கிய எச்சரிக்கை!'...
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் மீண்டும் பாதிக்கப்படுவது குறித்து அதிர்ச்சித் தகவல் ஒன்றை ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவது ஆறுதல் அளிக்கும்போதும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படும் நிகழ்வுகளும் நடந்து வருகின்றன. இருப்பினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர் உடலில் நோய் எதிர்ப்புசக்தி வந்துவிட்டால் மீண்டும் பாதிப்பே வராது என்ற தவறான புரிதல் மக்கள் மத்தியில் இருந்து வருகின்றது.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள ஐசிஎம்ஆர் இயக்குநர் மருத்துவர் பல்ராம் பார்க்கவா, "இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் மீண்டும் வைரஸால் பாதிக்கப்படுவது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இதில் புள்ளிவிவரங்களையும் சேகரித்து வருகிறோம். எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் உடலில் நோய் எதிர்ப்புசக்தி குறைந்தபட்சம் 3 மாதங்கள் வரையிலும் அதிகபட்சமாக 5 மாதங்கள் வரையில் மட்டுமே இருக்கும்.
குணமடைந்தவர் உடலில் நோய் எதிர்ப்புசக்தி 90 நாட்களுக்குப்பின் குறையத் தொடங்கினால், மீண்டும் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம். அதாவது 90 நாட்களுக்குப்பின் மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எத்தனை பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள், அதில் எத்தனை பேர் குணமடைந்துள்ளார்கள், குணமடைந்தவர்களில் மீண்டும் கொரோனா எத்தனை பேருக்கு வந்துள்ளது குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்.
ஆதலால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த ஒருவர் நோய் எதிர்ப்புசக்தி வந்துவிட்டதாக கருதி அலட்சியமாக இருக்காமல், தொடர்ந்து முகக்கவசம், சமூக விலகலைக் கடைபிடிப்பது அவசியம். அதேபோல கொரோனா நோயாளிகளின் உயிர்காக்கும் ரெம்டெசிவிர், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் போன்ற மாத்திரை, மருந்துகள் இடைக்காலத்தீர்வுதான். இது தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பிளாஸ்மா சிகிச்சையும் முழுமையாக பரிந்துரைக்கப்படவில்லை. அதுதொடர்பான விவாதங்களும், ஆய்வுகளும் நடந்து வருகின்றன" எனத் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
'உயிர் தியாகம் செய்த காவலர்களுக்கு நினைவு கல்வெட்டு'... திறந்து வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!
தொடர்புடைய செய்திகள்
- 'எப்படியாவது இந்த கொரோனாவ ஒழிச்சா போதும்'... 'பெரும் Risk-ஐ கையிலெடுக்கும் நாடு!!!'... 'கண்டிப்பாக பலனளிக்குமென ஆய்வாளர்கள் நம்பிக்கை!'...
- 'தமிழகத்தின் இன்றைய (20-10-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்...? - முழு விவரங்கள்...!
- 'இத டெய்லி யூஸ் பண்ணினா...' 'கொரோனாவ செயலிழக்க வச்சிடும்...' 'அதுக்கு அந்த பவர் இருக்கு...' - மருத்துவ ஆய்வு முடிவு...!
- "எல்லாரும் இறக்க போறோம்!".. ‘விமானத்தில்’ பெண் பயணி செய்த காரியம்.. பதைபதைப்புக்குள்ளான பயணிகள்!
- 'இத தொட்டாலே சிக்கல் தான்...' 'சீனால மறுபடியும் கொரோனா...' 'ஆனா இதுல வர்றது முதல் தடவ...' - சீன மக்கள் மீண்டும் அதிர்ச்சி...!
- சைலண்டாக இருந்து... சாதித்துக்காட்டிய தமிழகம்!.. 'அடிச்சான் பாரு அப்பாயின்ட்மென்ட் ஆர்டர்' மொமண்ட்!.. வெளியான 'சூப்பர் டூப்பர்' தகவல்!
- 'தமிழகத்தின் இன்றைய (19-10-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்...? - முழு விவரங்கள்...!
- 'கொரோனா ஒரு நோயே கிடையாது'... 'நம்பி கொண்டிருந்த பிட்னெஸ் மாடல்'... எந்த மனைவிக்கும் இந்த நிலைமை வர கூடாது !
- VIDEO: மாஸ்க் கழட்டாம எப்படிங்க சாப்பிடறது...? 'இருக்கு, அதுக்கும் ஒரு வழி இருக்கு...' - மாஸ்க் கழட்டாம சாப்பிட புது ஐடியா கண்டுபிடித்த ஹோட்டல்...!
- 'எமனாக வந்த கொரோனா'...'மனதை நொறுக்கிய அன்பு மகனின் திடீர் மரணம்'... கலங்க வைத்த மா.சுப்பிரமணியனின் உருக்கமான பதிவு!