'இருமல் சத்தத்திலேயே தெரிஞ்சிடும்...' 'கொரோனா இருக்கா இல்லையான்னு...' 'அதுவும் வீட்ல இருந்தே தெரிஞ்சுக்கலாம்...' எப்படி தெரியுமா...?
முகப்பு > செய்திகள் > இந்தியாஇனி பரிசோதனை செய்து மட்டுமல்லாமல் இருமல் மற்றும் பேசும் போது குரல் பதிவைக் கொண்டும் கொரோனா நோயாளிகளை கண்டுபிடிக்க முடியும் என புது வகை ஆய்வினை வெளியிட்டுள்ளது பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தின் (ஐஐஎஸ்சி) ஆராய்ச்சியாளர்கள்.
உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவிய நாள் முதல் வைரஸின் தன்மை, பரவும் விதம், அதன் பரிமாறும் தன்மை, தடுக்கும் முறைகள் குறித்த பல்வேறு ஆய்வுகள் தினம் தினம் குவிந்த வண்ணம் உள்ளன. இந்தியாவும் கொரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆய்வுகளில் அயராது உழைத்து வருகிறது. இந்நிலையில் ஒருவரின் இருமல் மற்றும் பேசும் ஓசை கொண்டும் அவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை கண்டுபிடிக்க முடியும் என்று தெரிவித்துள்ளது பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனம்.
இந்த குறிப்பிடத்தகுந்த ஆராய்ச்சியினை மேற்கொண்டு வரும் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மிக விரைவாகவும் குறைந்த செலவிலும் கொரோனா நோயாளிகளைக் கண்டறிய முடியும் என்கிறார்கள்.
இருமல் மற்றும் குரல் பதிவை அடிப்படையாக வைத்து இந்த சோதனை செய்யப்படுகிறது. மேலும் கொரோனா பாதித்தவர்கள் இருமுவதற்கும், மற்ற நோயாளிகள் இருமுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதாகவும் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த திட்டத்துக்கு கோஸ்வரா என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு தொழில்நுட்பத்தை இணையம் அல்லது செல்போன் செயலிகளாக உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர். அதன்மூலம் கொரோனா வைரஸ் நமக்கு உள்ளதா என வீட்டிலிருந்தே தெரிந்து கொள்ள, இருமல் மற்றும் குரல் பதிவை அந்த செயலியில் பதிவு செய்தால், அவர்களுக்கு கொரோனா இருக்கிறதா, இல்லையா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளலாம்.
கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் இருமல் மற்றும் பேசும் சத்தத்தினையும், மற்ற நோயால் பாதிப்படைந்திருக்கும் நோயாளிகளின் இருமல் மற்றும் குரல் பதிவையும் சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சில மாதிரிகளே தற்போது பரிசோதனை செய்யப்பட்டுள்ளதால் இதை வைத்து எந்த முடிவிற்கும் வர இயலாது எனவும் குறிப்பிடுகின்றனர் ஆய்வாளர்கள்.மேலும் அதிக மாதிரிகளை பரிசோதிக்க மருத்துவமனைகளின் உதவியை நாட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக ஐசிஎம்ஆர்-ன் ஒப்புதலைப் பெற விண்ணப்பித்துள்ளோம் என்று ஸ்ரீராம் கணபதி கூறியுள்ளார்.
மேலும் மார்ச் மாத இறுதியில் இருந்து இந்த திட்டத்தில் பணியாற்றி வரும் 7 பேர் கொண்ட குழுவுடன் பெங்களூரு ஐஐஎஸ்சி-யின் எலக்ட்ரிக் என்ஜினியரிங் உதவிப் பேராசிரியர் ஸ்ரீராம் கணபதியும் இணைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கழுத்தில் விழுந்த 'பலாப்பழம்'... சிகிச்சைக்காக 'மருத்துவமனை' சென்றவருக்கு... பரிசோதனையில் உறுதியான 'கொரோனா' !
- இந்தியாவில் கொரோனாவுக்கு ‘டிமிக்கி’ கொடுத்த ஒரே மாநிலம்.. இதுவரை யாருக்குமே பாதிப்பு இல்லையாம்..!
- கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த... மருத்துவமனைகளில் புதிய சீர்திருத்தம்!.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு என்ன?
- 'சீனாவில் மீண்டும் கொரோனா'... 'முதல் முறையா வாயைத் திறந்த வுகான் வைராலஜி நிறுவனம்'... எப்படி வந்தது கொரோனா?
- கொரோனா முகாமில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!... ஆடைகளைக் கிழித்து... குடி போதையில்... பதபதைக்க வைக்கும் சம்பவம்!.. என்ன நடந்தது?
- 'டோன்ட் ஒரி, மாஸ்க் போட்டாலும் யாருன்னு தெரிஞ்சிரும்'... 'மாஸ்க்கை மாஸாக மாற்றிய கேரள கலைஞர்'... குவியும் ஆர்டர்!
- 'இத மட்டும் ஏத்துக்கவே முடியல!.. கருணையற்ற கொரோனா'... சென்னையில் பரபரப்பு!.. தமிழகத்தை அதிரவைத்த தகவல்!
- 'பங்கு இதுக்க மேல பொறுக்க முடியாது'... 'கோதாவில் குதித்த இளைஞர்'... கல்யாணம் முடிஞ்சும் அவரவர் வீட்டுக்குப் போன தம்பதி!
- 'இந்தியா' முழுவதும் 3800-ஐ தாண்டிய 'பலி' எண்ணிக்கை... 'அதிகபட்ச' இறப்பை பதிவுசெய்த 'மாநிலங்கள்' இதுதான்!
- சென்னை உள்ளிட்ட 11 மாநகரங்களை கொரோனாவிடம் இருந்து காப்பது எப்படி?.. வெளியான பரபரப்பு தகவல்!.. அடுத்து இரண்டு மாதங்களுக்கு இப்படித்தான் இருக்குமாம்!