'கொரோனா' பாதிப்பு நெருக்கடியால் 'அதிரடி' நடவடிக்கை... 'பிரபல' நிறுவனங்கள் வரிசையில் இணைந்த 'இந்திய' நிறுவனம்...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா பாதிப்பால் டாடா நிறுவனம் அதன் சில ஊழியர்களின் சம்பளத்தைக் குறைக்கவுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலைத் தடுக்க மார்ச் 25 முதல் மே 17 வரையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்களும், தொழில் துறையினரும் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். தற்போது ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு, பல்வேறு துறைகளில் தொழில் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கியுள்ள போதும் நெருக்கடியான நிலையே இன்னும் நீடித்து வருகிறது. இதன்காரணமாக பல நிறுவனங்களும் செலவைக் குறைக்க வேண்டி சம்பளக் குறைப்பிலும், ஆட்குறைப்பிலும் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான டாடா குழுமமும் தற்போது சம்பளக் குறைப்பு நவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. டாடா குழும நிறுவனங்களான இந்தியன் ஹோட்டல்ஸ் (தாஜ்), டாடா சியா ஏர்லைன்ஸ் (விஸ்தாரா), டாடா மோட்டார்ஸ், டாடா பவர், டாடா கம்யூனிகேஷன்ஸ் ஆகியவை  ஊரடங்கால் கடும் வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளதால் வேறு வழியின்றி ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க முடிவு செய்துள்ளது.

மேலும் விஸ்தாரா விமான நிறுவனம் தனது ஊழியர்களில் 30 சதவீதம் பேரை சம்பளம் இல்லா விடுப்பில் அனுப்பியுள்ளது. அத்துடன் கொரோனா பாதிப்புகள் தொடரும் பட்சத்தில் அடுத்து வரும் மாதங்களிலும் இதே நிலை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், கோடாக் மகிந்திரா நிறுவனங்களைத் தொடர்ந்து தற்போது டாடா குழுமமும் சம்பளக் குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்