'நூற்றுக்கணக்கானோர்' தேர்வு 'எழுதிக்கொண்டிருக்கும்போது...' 'ஒரு மாணவனுக்கு மட்டும் வந்த...' 'டெஸ்ட்' ரிப்போர்ட்டில் அதிர்ச்சி...'
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடகாவில் கொரோனா பரவலுக்கு மத்தியிலும் நடந்து வரும் 10ம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் சிலருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை தற்போது 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதற்கு மத்தியில் கடந்த 25-ம் தேதி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கியது. முகக்கவசம், கிருமி நாசினி கொண்டு கை கழுவுதல் என பலத்த கட்டுப்பாடுகளுடன் சுமார் 8 லட்சத்து 48 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதி வருகின்றனர்.
இந்நிலையில் ஹாசன் மாவட்டம் அரகால்குட் வட்டத்தில் உள்ள மையத்தில் சனிகிழமை தேர்வு எழுதிய மாணவர் ஒருவருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அந்த மாணவர் தேர்வு எழுதிக் கொண்டிருக்கும்போது கொரோனா உறுதியான தகவல் வந்துள்ளது. ஆனாலும், அவரைத் தொடர்ந்து தேர்வு எழுத அதிகாரிகள் அனுமதித்துள்ளனர்.
அதனால் அந்த அறையில் தேர்வு எழுதிய மற்ற மாணவர்களும், தேர்வு கண்காணிப்பாளரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள கர்நாடக கல்வித்துறை அதிகாரிகள், தேர்வறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டிருந்ததால் அச்சப்பட வேண்டாம் என கூறியிருக்கிறது.
இதேபோல் கடாக் மாவட்டம் லக்ஷ்மேஸ்வரா என்ற பகுதியில் வியாழக்கிழமை தேர்வு எழுதிய மாணவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் தொடர்புடைய 19 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஹாசன் மாவட்டத்தில் பாட்டிக்கு கொரோனா உறுதியானதால் பேரன் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேற்கு பெங்களூருவில் உள்ள தேர்வு மையத்தில் இருந்து 80 அடி தூரத்தில் உள்ள வீடு ஒன்றில் கொரோனா உறுதியானதால் அங்கே தேர்வு எழுதிய 389 பேர் அச்சத்தில் இருக்கிறார்கள். இது தவிர்த்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட பத்தாம் வகுப்பு மாணவர்கள் 57 பேரில் 25 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் தற்போது தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டாரு... காப்பாத்திடலாம்னு நினைச்சப்ப தான்... அவர் மரண செய்தியோட சேர்த்து 'இந்த' அதிர்ச்சி தகவலும் வந்துச்சு!
- மதுரையில் 2 ஆயிரத்தை நெருங்கியது பாதிப்பு எண்ணிக்கை!.. ராமநாதபுரத்தில் இன்று 83 பேருக்கு தொற்று!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- ஒன்றரை வயது குழந்தை உட்பட 54 உயிர்களை ஒரே நாளில் கொலையுண்ட கொரோனா!.. தமிழகத்தில் 80 ஆயிரத்தை கடந்த பாதிப்பு எண்ணிக்கை!.. முழு விவரம் உள்ளே
- VIDEO: மற்றுமொரு சாத்தான்குளம் சம்பவம்: ‘போலீஸ் தாக்குதலால் ‘டீன் ஏஜ்’ இளைஞன் அதிர்ச்சி மரணம்..? - பின்னணி என்ன?.. வெளியான பரபரப்பு தகவல்கள்..!
- தனியார் பள்ளி 'கல்விக்கட்டணம்' குறைக்கப்படுமா?... நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட 'முக்கிய' முடிவு!
- ‘தடபுடலா நடந்த கல்யாணம்’.. அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி.. அதிரடி ‘ஆக்ஷனில்’ இறங்கிய அதிகாரிகள்..!
- VIDEO: ‘இந்த கொடுமை யாருக்கும் வரக்கூடாது’.. கொதித்த ‘ஜெகன்மோகன்’.. ஆந்திராவை அதிரவைத்த வீடியோ..!
- "இங்கயும் கொரோனா வந்துடுச்சு... 2 நாளைக்கு முதல்வர் ஆபீஸ் க்ளோஸ்.. யாரும் வராதீங்க!".. அதிரடியாக அறிவித்த முதல்வர்!
- “எந்த பக்கம் போனாலும் கேட் போடுறாங்களே!”.. மதுரை டூ சிவகங்கை.. சிவகங்கை டூ சோழவந்தான்.. படையெடுக்கும் மதுபிரியர்கள்!
- 'கொரோனாவை' எதிர்க்க உதவும் 'டி-செல்கள்' சிகிச்சை... 'புதிய வழிமுறைகள்' குறித்த 'ஆராய்ச்சி' முடிவுகள் 'வெளியீடு...'