'பேப்பர் எங்கடா?'.. 'விட்ருங்க.. நான் போய் எடுத்துட்டு வரேன்'.. நடுரோட்டில் வாகன ஓட்டியை புரட்டி எடுத்த போலீஸ்.. வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அண்மைக் காலமாகவே டிராஃபிக் காவலர்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் எழத் தொடங்கியபடி இருக்க, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சம்பவம் அரங்கேறி வருவது மக்களிடையேவும் காவல் துறையினரிடையேவும் பெரும் பரபரப்பை உருவாக்கி வருகிறது.

அந்த வகையில் இன்னொரு சம்பவமாக, உத்தரப் பிரதேசத்தின் சித்தார்த் நகரில், குழந்தையுடன் சென்ற வாகன ஓட்டி ஒருவரை போலீஸ் அதிகாரி ஒருவர், வாகன ஓட்டி சரியான ஆவணங்களை சமர்ப்பிக்காததால், சரமாரியாக தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது குழந்தையுடன் பைக்கில் வந்த அந்த நபர், ஒரு கட்டத்துக்கு மேல் போலீஸாரிடம் அடிவாங்க முடியாமல், மண்டியிட்டபடி, தன்னை விட்டுவிடுமாறும், தான் சென்று ஆவணங்களை எடுத்துவருமாறும் கெஞ்சுகிறார். ஆனாலும் விதிகளை மீறிய குற்றத்துக்காக, போலீஸ் அதிகாரி அந்த வாகன ஓட்டியை அடித்துத் துன்புறுத்தியுள்ள வீடியோ பெரும் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.

UTTERPRADESH, COPS, TRAFFIC, BIKE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்