‘எதிரெதிர் திசையில் நின்ற அக்கா, தம்பி’... 'கண்கள் பார்த்த நிமிடத்தில் நடந்த பயங்கரம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில், காவல்துறைக்கும், மாவோயிஸ்ட்டுக்கும் நடந்த தாக்குதலின்போது, எதிர்பாராதவிதமாக சகோதரன் மற்றும் சகோதரி சந்தித்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிஷா, சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் கொடிகட்டி பறந்து வருகிறது. அவர்களை பிடிக்க மத்திய, மாநில அரசுகளும், பல்வேறு அதிரடி நடவடிகைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஜூலை மாதம், 28-ந் தேதி அன்று சுக்மா மாவட்டத்தில், பாலேங்டாங் காடுகளில் உள்ள ஒரு குன்றில், 30 பேர் கொண்ட மாவேயிஸ்டுகள் குழு கூடியிருந்த தகவல், காவல்துறைக்கு கிடைத்தது.

இதையடுத்து சுக்மா காவல்துறையின் கோப்னியா சைனிக் (ரகிசிய துருப்பு) மற்றும் ஆபரேஷன் பிரிவு தளபதி வெட்டி ராமா ஆகியோரின் தலைமையில் சுமார் 140 பேர் கொண்ட அதிரடிப்படையினர், இரவு முழுவதும்  தேடுதல் வேட்டை நடத்தினர். கடந்த 29-ம் தேதி காலை 7 மணியளவில் குன்றின் அருகே இருந்த மாவோயிஸ்ட் முகாமை சுற்றி வளைத்து, அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலின்போது, மாவோயிஸ்ட் உயர்மட்ட குழு உறுப்பினரான வெட்டி கன்னி என்ற பெண் மாவோயிட்டும், எதிர்திசையில் அதிரடிப் படையில் நின்ற வெட்டி ராமா என்பவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்ட நிலையில், ஒரு நிமிடம் அவர்களின் கண்கள் பணித்தன. ஏனெனில் இருவரும் அக்கா, தம்பி ஆவர். இருவரும் ஒரே ரத்தம் என்றாலும், எதிர்ரெதிர் திறையில் நின்றனர். எனினும் மாவோயிஸ்ட்கள், காவல்துறை அதிகாரியும், வெட்டி கன்னியின் தம்பியுமான, வெட்டி ராமா மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு காவல்துறை சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டது.

இதுகுறித்து கூறிய வெட்டி ராமா, ‘நான் அவளை நோக்கி சுட விரும்பவில்லை. நான் அவ்வாறு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். அவளுடைய மாவோயிஸ்ட் ஆட்கள், எங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். எனவே நாங்கள் பதிலடி கொடுத்தோம். திடீரென்று அவள் காட்டில் காணமால் போனாள்’ என்றார். வெட்டி ராமாவும் ஏற்கனவே மாவோயிஸ்டில் இருந்து பின்னர் சரண்டராகி, தற்போது காவல்துறையில் பணியாற்றி வருகிறார்.

CHATTISGARH, SUKMA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்