5 ரூபாய்க்கு ஆசைப்பட்ட கான்ட்ராக்டர்.. ரூ. 1 லட்சம் அபராதம் போட்ட ரயில்வே.. ஒரே ஒரு வாட்டர் பாட்டில்தான் காரணம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாதண்ணீர் பாட்டிலுக்கு கூடுதலாக 5 ரூபாய் வசூலித்த ஒப்பந்ததாரருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது ரயில்வே நிர்வாகம்.
தினசரி ரயில்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இந்தியாவில் மிக அதிகம். ரயில் பயணங்களின்போது, சில ஒப்பந்ததாரர்கள் கூடுதலாக பணம் வசூலிப்பதாக அவ்வப்போது ரயில்வே நிர்வாகத்திடம் மக்கள் புகார் அளித்து வருகின்றனர். அந்த வகையில், தண்ணீர் பாட்டிலுக்கு கூடுதலாக 5 ரூபாய் வசூலித்த ஒப்பந்ததாரருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது ரயில்வே நிர்வாகம்.
உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து சண்டிகர் சென்ற ரயிலில் தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. கடந்த 15 ஆம் தேதி சண்டிகரில் இருந்து ஷாஜகான்பூருக்கு சென்ற ஷிவம் பட் என்ற பயணி ரயிலில் தண்ணீர் பாட்டில் வாங்கியிருக்கிறார். அதில் விலையாக 15 ரூபாய் என குறிப்பிடப்பட்டிருந்திருக்கிறது. ஆனால், தினேஷ் என்ற அந்த ஊழியர் 20 ரூபாய் வசூலித்திருக்கிறார். இதனால் ஷிவம் அந்த விற்பனையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
அப்போது, தனது மேலாளர் 20 ரூபாய் தான் வாங்கவேண்டும் என கூறியுள்ளதாக அந்த விற்பனையாளர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து. ஷிவம் இந்த சம்பவம் குறித்து ரயில்வே நிர்வாகத்துக்கு ட்விட்டர் மூலமாக புகார் அளித்திருக்கிறார். இதை அறிந்த ரயில்வே அதிகாரிகள் இதுகுறித்த நடவடிக்கையில் இறங்கினர். தினேஷின் மேலாளரான ரவிக்குமாரை 144 (1) எனும் ரயில்வே சட்டத்தின் கீழ் அதிகாரிகள் கைது செய்திருக்கின்றனர். மேலும், அந்த ஒப்பந்ததாரருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கவும் மண்டல ரயில்வே மேலாளர் மன்தீப் சிங் பாட்டியா பரிந்துரைத்திருக்கிறார்.
இதனையடுத்து, உத்திர பிரதேசத்தை சேர்ந்த ஒப்பந்ததாரரான சந்திர மவுலி என்பவரிடத்தில் இருந்து ஒரு லட்ச ரூபாயை அதிகாரிகள் அபராதமாக வசூல் செய்திருக்கின்றனர். இதுகுறித்து பேசியுள்ள மண்டல ரயில்வே மேலாளர் மன்தீப் சிங் பாட்டியா,"சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடமிருந்து உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் பெறப்பட்ட பிறகு அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது" என்றார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- பூட்டிய ரயில் கழிவறைக்குள் சடலமாக கிடந்த நபர்.. 900 கிமீ கடந்த பிறகு தெரிய வந்த உண்மை!!.. குலை நடுங்கிப்போன பயணிகள்
- ரயில் வரும்போது நடைமேடைக்கும் தண்டவாளத்திற்கும் இடையே சிக்கிய பயணி! அதிர்ஷ்டவசமாக தப்பிய நிமிடங்கள்
- "ஃபர்ஸ்ட் டைம்.." 10 மாச குழந்தைக்கு ரெயில்வே வேலை.. 18 வருசம் கழிச்சு டியூட்டியில சேர்ந்துக்கலாம்.. "என்ன காரணம்.??"
- "ஹலோ.."தண்டவாளத்தின் அடியில் சிக்கியும், ரயில் போகும் வரை கூலாக போன் பேசிவிட்டு எழுந்து வந்த இளம் பெண்! யாரும்மா நீ?
- அந்த மனசு தான் சார் கடவுள்.. ரயில் டிராக்கில் நடந்த திக்திக் நிமிடங்கள்... ஹீரோ மாதிரி வந்த நபர்..
- சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் ஷாக்..! துப்பாக்கியுடன் நுழைந்த கொள்ளையர்கள்.. என்ன நடந்தது..?
- 'இந்த காலத்தில இப்படி ஒரு மனஷனா'?.. குழந்தையை காப்பாற்றிய கையோடு... இளைஞர் எடுத்த அதிரடி முடிவு!.. 'நம்ம ஆயுசுக்கும் அவருக்கு சல்யுட் அடிக்கலாம்'!
- அவரோட அந்த 'தில்லுக்கு' தான் இந்த அன்பளிப்பு...! சொன்னபடியே செய்த 'ஜாவா' நிறுவனம்...! - என்ன மாடல் பைக் தெரியுமா...?
- நாடு முழுவதும் குறுகிய தூர ரயில் ‘கட்டணம்’ உயர்வு.. என்ன காரணம்..? ரயில்வே அமைச்சகம் முக்கிய அறிவிப்பு..!
- "நான் உன் அப்பா மாதிரி... வாங்கிக்கமா!".. பாண்டிச்சேரி டூ ஒரிசா ரயில் பயணத்தில் தொலைந்த மனைவி!.. 3 நாட்கள் தனி ஒருவராக தேடி அலைந்த கணவர்.. கடைசியில் எங்கிருந்தார் தெரியுமா?