காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் முடிவில்... கட்சிக்குள் 'சூறாவளி புயல்'!.. கொதித்தெழுந்த மூத்த நிர்வாகிகள்!.. என்ன நடந்தது?
முகப்பு > செய்திகள் > இந்தியாராகுல் காந்தி குறித்து காட்டமாக பதிவிட்ட ட்விட்டை காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் டெலிட் செய்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்குப் பிறகு, கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, கட்சித் தொண்டர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. அதனால் தற்காலிக தலைவர் பதவியை சோனியா காந்தி ஏற்றார். உடல் நிலை சரியில்லாத காரணத்தால், அவரால் முழு அளவில் கட்சிப் பணிகளில் கவனம் செலுத்த முடியவில்லை.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு துடிப்பான தலைமை தேவை எனக் கருதுவதாகக் கூறி குலாம் நபி ஆசாத், சசி தரூர் உள்ளிட்ட 23 மூத்த நிர்வாகிகள் சோனியாவுக்கு கடிதம் எழுதினர். அதைத் தொடர்ந்து, காரிய கமிட்டி கூட்டத்தை காங்கிரஸ் கட்சி தற்காலிக தலைவர் சோனியா காந்தி இன்று கூட்டியுள்ளார்.
இதற்கிடையே, 23 சீனியர் தலைவர்கள் கடிதம் எழுதியது தொடர்பாக ராகுல் காந்தி கருத்து தெரிவிக்கையில், கடிதத்தின் பின்னணியில் பாஜக இருப்பதாக கூறியிருந்ததாக தகவல் வந்தது. இதுகுறித்து, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பொதுவெளியில் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
குறிப்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், 'நாங்கள் பா.ஜ.கவுடன் கூட்டு வைத்திருப்பதாக ராகுல் காந்தி கூறுகிறார். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக ராஜஸ்தான் நீதிமன்றத்தில் வாதாடினேன். பா.ஜ.க அரசைக் கீழே இறக்கி காங்கிரஸ் கட்சியைப் பாதுகாத்தேன். கடந்த 30 ஆண்டுகளில் பா.ஜ.கவுக்கு ஆதரவாக எந்த அறிக்கையையும் வெளியிட்டதில்லை. இருந்தாலும் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்துள்ளோம்' என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்தப் பதிவை கபில் சிபல் நீக்கியுள்ளார். அதற்கு விளக்கமளித்துள்ள அவருடைய புதிய ட்விட்டர் பதிவில், 'ராகுல் காந்தி பேசியதாக கூறப்படுவதை அவர் ஒருபோதும் கூறவில்லை என்று என்னிடம் தனிப்பட்ட முறையில் விளக்கினார். அதனால், என்னுடைய பழைய ட்விட்டை திரும்பப் பெறுகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'மன்னிப்பு' கேட்கிறேன்... நான் அந்த 'கட்சிக்கு' செல்லவில்லை... நடிகை குஷ்பூ விளக்கம்!
- BREAKING: 'கட்சியை உடைத்து... காங்கிரஸ் 'ஆட்சியை' கவிழ்க்கிறாரா சச்சின்...???' - அடுத்தடுத்து காய் நகர்த்தல்களால், 'அதிரடி திருப்பங்களுடன்' ராஜஸ்தான் அரசியல்...! - பரபரப்பு தகவல்கள்!
- ‘இந்திய' வீரர்களிடம் 'ஆயுதங்கள் இருந்தன...' அதை 'பயன்படுத்தாததற்கு' இதுதான் 'காரணம்...' 'ராகுல்' கேள்விக்கு 'அமைச்சர் பதில்...'
- 'மத்திய அமைச்சரை காணவில்லை...' 'போஸ்டர்' ஒட்டிய 'எதிர்க்கட்சியினர்...' "நாங்கள் ஊரடங்கு சட்டத்தை மதிப்பவர்கள்..." 'அமைச்சரின் அசத்தல் பதில்...'
- “உங்க ஆபாச அரசியல் என்கிட்ட செல்லாது!”.. பாலின ரீதியான விமர்சனத்துக்கு ஜோதிமணி பதிலடி!.. களமிறங்கிய 'நெட்டிசன்கள்'.. அதிர்ந்த ட்விட்டர்!
- கொஞ்சம் 'பேக்ல' போய் 'யோசிச்சு' பாருங்க 'மோடிஜி'... 'தோற்றுப்போன' திட்டத்துக்கு '40 ஆயிரம் கோடி' ஒதுக்கிருக்கீங்க... 'டிவிட்டர் பதிவில் விமர்சித்த ராகுல்...'
- ‘வெளிமாநிலத் தொழிலாளர்கள்’ சொந்த ஊர் திரும்ப ஆகும் ‘ரயில்’ பயண செலவை காங்கிரஸ் ஏற்கும்.. சோனியா காந்தி..!
- 'எம்.பி.-க்கள் நிதியை நிறுத்துவதை ஏற்க முடியாது!'... கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு!... என்ன காரணம்?
- 'இத நிறைய பேர் என்கிட்ட கேக்குறாங்க'...'காங்கிரஸ் மகளிர் தின விழாவில்'...'குஷ்பு' சொன்ன ருசிகர பதில்!
- 'ம.பி.'-யில் 20 விக்கெட் 'அவுட்'... 'ஒரே பந்தில்'... 'சிந்தியாவின்' சூறாவளிச் சுழலில் சிக்கிய 'இந்திய' அரசியல்... 'அடுத்தடுத்த' அதிர்ச்சியால் ஆடிப்போயுள்ள 'காங்கிரஸ்'...