‘வெளிமாநிலத் தொழிலாளர்கள்’ சொந்த ஊர் திரும்ப ஆகும் ‘ரயில்’ பயண செலவை காங்கிரஸ் ஏற்கும்.. சோனியா காந்தி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா ஊரடங்கால் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் சிக்கி தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்களின் ரயில் பயண செலவை காங்கிரஸ் ஏற்கும் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு தழுவிய ஊரடங்கால் சிக்கித் தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்ப ஆகும் ரயில் பயண செலவை காங்கிரஸ் ஏற்கும். அவர்களுக்காக ஒற்றுமையுடன் தோளோடு தோள் நிற்கிறோம். நமது தொழிலாளர்கள் நம் நாட்டின் வளர்ச்சியின் தூதர்களாக உள்ளனர்.
வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் நமது குடிமக்களுக்கு இலவச விமான பயணத்தை ஏற்பாடு செய்வதன் மூலம் போக்குவரத்து மற்றும் உணவு போன்றவற்றிற்காக கிட்டத்தட்ட ரூ.100 கோடியை அரசு செலவு செய்கிறது. குஜராத்தில் ஒரு பொது வேலைத்திட்டத்திற்காக, ரயில்வே அமைச்சகம் பிரதமரின் கொரோனா நிதிக்கு ரூ.151 கோடி கொடுக்கிறது. அப்படியானால் நமது நாட்டின் தொழிலாளர்களுக்கு குறிப்பாக இலவச ரயில் பயணத்தை இந்த கடுமையான நேரத்தில் ஏன் கொடுக்க முடியாது?
ஊரடங்கு குறித்து மத்திய அரசு முன் அறிவிப்பு கொடுக்கவில்லை. இதனால் தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது வீடுகளுக்கு திரும்புவதற்காக வாய்ப்பு மறுக்கப்பட்டது. இன்றும் கூட லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தங்கியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்ப விரும்புகின்றனர். ஆனால் பணம் அல்லது இலவச போக்குவரத்து இல்லை.
கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இந்த நெருக்கடியான நேரத்தில் மத்திய அரசும், ரயில்வே அமைச்சகமும் ரயில் டிக்கெட்டுகளுக்கு கட்டணம் வசூலிக்கின்றன. காங்கிரஸின் தொடர்ச்சியான கோரிக்கைகளை முற்றிலுமாக புறக்கணிக்க மத்திய அரசு, ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. எனவே, இந்திய தேசிய காங்கிரஸ், ஒவ்வொரு மாநில காங்கிரஸ் கமிட்டியும் ஒவ்வொரு ஏழை தொழிலாளி மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளியின் ரயில் பயணத்திற்கான செலவை ஏற்க வேண்டும். இதுதொடர்பாக தேவையான நடவடிக்கைகளை கட்சி எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் தமிழக முதல்வரிடம் ரூ.1 கோடி வழங்கப்படும் என ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'மாநகராட்சி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட...' '750 திருமண மண்டபங்கள்...' 'தனியார் மற்றும் அரசு பள்ளிகள்...' 'அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் சென்னை...'
- 'என் மகளோட உயிர் போறப்போ நான் அவகூட இல்ல...' 'இறந்து 2-வது நாளில் கொரோனா டூட்டிக்கு திரும்பிய போலீஸ்...' நெகிழ்ச்சி சம்பவம்...!
- 'கொரோனா' பரப்பும் 'காய்கறி சந்தைகள்...' 'கோயம்பேட்டைத்' தொடர்ந்து 'பீதியை கிளப்பிய ஏரியா?...'
- 'தொடங்கியது அக்னிநட்சத்திரம்...' 'அடங்குமா கொரோனா?...' 'இந்த ஆண்டு எப்படி இருக்கப் போகிறது வெயில்...'
- குழந்தைக்கு 'சோறூட்டுவதில்' தகராறு... ஆத்திரத்தில் 'கணவனை' கொலை செய்த மனைவி!
- கொரோனாவின் 'கோரப்பிடியில்' இருந்து... அடுத்தடுத்து அதிரடியாக 'மீண்ட' தமிழக மாவட்டங்கள்.. என்ன காரணம்?
- மாநிலத்தை 'திறக்கும்' நேரம் வந்துவிட்டது... கொரோனாவுடன் 'வாழ' பழகிக்கொள்ள வேண்டும்!
- 'தமிழகத்தில்' பெட்ரோல், டீசல் விலை 'உயர்வு'... 'இன்று' நள்ளிரவு முதல் 'அமல்'... தமிழக அரசு 'அறிவிப்பு'...
- ‘ஊரடங்கை தளர்த்த முடியாமல் தவிக்கும் உலக நாடுகள்’... ‘திரும்பவும் களைக்கட்ட தொடங்கியதால்’... ‘ஒரே நாளில் வசூலை அள்ளிய சீனா’!
- 'சிறப்பான' நடவடிக்கைகளால்... இந்தியா 'தலைமைப்' பொறுப்புக்கு உயர்ந்துள்ளது... 'பாராட்டித்தள்ளிய' நாடு!