'வெளியேறிய நடிகை திவ்யா ஸ்பந்தனா'... 'அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் தொண்டர்கள்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாகாங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் நடிகையுமான திவ்யா ஸ்பந்தனா டுவிட்டரிலிருந்து வெளியேறியுள்ளார்.
நாடு முழுவதும் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது. காங்கிரஸ் கட்சி வெறும் 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அதனையடுத்து, தோல்வி குறித்து ஆலோசனை செய்ய காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதனிடையே காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, ‘ஒரு மாதத்துக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் யாரும் டி.வி விவாதங்களில் பங்கேற்க மாட்டார்கள்’ என்று தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், இரண்டு தினங்களுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் நடிகையுமான திவ்யா ஸ்பந்தனா, ‘மத்திய நிதியமைச்சராக பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், திவ்யா ஸ்பந்தனா டுவிட்டரில் இருந்து வெளியேறியுள்ளார்.
அவரது டுவிட்டர் கணக்கு, தற்போது பயன்பாட்டில் இல்லை. திவ்யா ஸ்பந்தனா, டுவிட்டரில் மிகவும் ஈடுபாட்டுடன் உள்ளவர். தேர்தல் காலங்களில் ராகுல் காந்திக்கு ஆதரவாகவும், மோடியை விமர்சித்தும் பல பதிவுகளை தொடர்ச்சியாக பதிவிட்டுவந்தார். அவருடைய பதிவுக்கு மக்களிடையே நல்ல வரவேற்புகள் கிடைத்துவந்தன. இருப்பினும், திவ்யா டுவிட்டரிலிருந்து வெளியேறியதற்கான காரணம் குறித்து அவர் தரப்பிலிருந்து எந்த விளக்கமும் வெளிவரவில்லை.
2011-ல் அரசியலில் குதித்த அவர், காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கடந்த 2013-ம் ஆண்டில் மாண்டியா தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஓராண்டு மட்டுமே எம்.பி.யாக இருந்த நிலையில், 2014-ல் நடந்த தேர்தலிலும் மறுவாய்ப்பு பெற்றார்.
தேர்தலில் தோற்றிருந்தாலும் காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பொறுப்பில் தீவிரமாகச் செயல்பட்டுவந்தார். அவருடைய செயல்பாடுகள் பிடித்துபோனதால் 2017-ல் சமூக வலைதளப் பொறுப்பாளர் பதவியை ராகுல் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- விரைவில் தமிழக முதல்வராக வர வேண்டும்.. மு.க.ஸ்டாலினை வாழ்த்திய ஜெகன்!
- 'மோடிக்கு கெடைச்ச வெற்றியா? அது ரஜினிக்கு! என்னப் பொருத்தவரை, இது வாக்கு எந்திரத்தோட வெற்றி’.. அரசியல் பிரபலம்!
- 'அதுக்கு சான்ஸ் இருக்கா?'.. ‘வெய்ட் அண்ட் சீ’..ஸ்டாலின் சொன்ன பஞ்ச் பதில்!
- 'பிடிவாதம் பிடிக்கும் ராகுல் காந்தி?'... அடுத்தது என்ன??
- 'நேரு, இந்திரா காந்தி வரிசையில் முன்னேறும் நரேந்திர மோடி'!
- பிறந்த குழந்தைக்கு ‘மோடியின்’ பெயரைச் சூட்டிய முஸ்லீம் தாய் சொல்லும் காரணம்!
- 'தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு' லஞ்ச்க்கு ‘நோ’ சொல்லும் லாலு? இதுதான் காரணமா?
- எம்.பி.யான இன்ஸ்பெக்டர்... முன்னாள் டி.எஸ்.பி.க்கு சல்யூட்... வைரலான புகைப்படம்!
- சுட்டுக்கொன்றவர்களுக்கு தண்டனை.. உதவியாளரை சுமந்து சென்ற ஸ்மிருதி இரானி ஆவேசம்!
- ‘அட இப்டியும் ஒரு எம்.பியா’?.. ‘ஆச்சரியமூட்டும் எம்.பியின் செயல், பாராட்டும் மக்கள்’!