VIDEO: தமிழ்நாட்டைப் பத்தி ஏன் அதிகமாக பேசுனீங்க..? நிருபர் கேள்விக்கு ராகுல் காந்தியின் ‘நச்’ பதில்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டைப் பற்றி அதிகமாக பேசியது குறித்து நிருபர் எழுப்பிய கேள்விக்கு ராகுல் காந்தி பதிலளித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

பட்ஜெட் தாக்கல்

நாடாளுமன்றத்தில் பொது பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டுக்கு வரவேற்பு மற்றும் எதிர்ப்பு என்று கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. இந்த பட்ஜெட்டை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ‘இது ஒன்றும் இல்லாத பூஜ்ஜிய பட்ஜெட்’ என கடுமையாக சாடினார்.

ராகுல் காந்தி

இந்த நிலையில் நேற்று நாடளுமன்ற மக்களவையில் ராகுல் காந்தி பேசிய போது பாஜக அரசை கடுமையாக குற்றம் சாட்டினார். அதில், ‘மத்திய, மாநில அரசுகளின் கூட்டுப் பங்களிப்பில் மட்டுமே இந்தியாவை நடத்த முடியும். மாநிலங்களின் குரலை பாஜக ஒடுக்க முடியும் என நினைப்பது ஒருபோதும் நடக்காது’ என கூறினார்.

தமிழ்நாடு

தொடர்ந்து பேசிய அவர், ‘நீங்கள் இரண்டு இந்தியாவை உருவாக்கி வைத்துள்ளீர்கள். அது பணக்காரர்களுக்கான இந்தியா, ஏழைகளுக்கான இந்தியா என்று பிரித்து வைத்துள்ளீர்கள். இந்தியா என்பது கூட்டாட்சி அரசு, ராஜாங்கம் இல்லை. தமிழகத்தில் நீட் குறித்த விவகாரத்துக்கு நீங்கள் செவி கொடுக்கவில்லை. உங்களுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையில் ஒருபோதும் நீங்கள் தமிழக மக்களை ஆட்சி செய்ய முடியாது’ என கடுமையாக பேசினார். ராகுல் காந்தின் இந்த பேச்சுக்கு தமிழக எம்பிக்கள் கைத்தட்டி வரவேற்பு தெரிவித்தனர்.

நிருபர் கேள்வி

இந்த நிலையில் கூட்டம் முடிந்து நாடாளுமன்ற வளாகத்தை விட்டு வெளியே செல்வதற்காக ராகுல் காந்தி நடந்து சென்றார். அப்போது நிருபர் ஒருவர், ‘நீங்கள் தமிழ்நாட்டை பத்தி அதிகமா பேசறீங்களே ஏன்?’ என கேள்வி எழுப்பினார். இதற்கு, ‘நானும் தமிழன் தானே’ என ராகுல் காந்தி பதில் கூறினார். இந்த தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உத்தரப்பிரதேசம் குறித்து உரையில் இடம்பெறவில்லையே என மற்றொரு நிருபர் கேள்வி எழுப்பினார். ஆனால் இந்த கேள்விக்கு ராகுல் காந்தி பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

RAHULGANDHI, CONGRESS, LOKSABHASPEECH, TAMILNADU

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்