‘ஆய்வுக்கு வந்த அதிகாரியிடம் எம்.எல்.ஏ செய்த அதிர்ச்சிக் காரியம்..’ வைரலாகும் வீடியோ..
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிரா மாநிலம் மும்பை - கோவா சாலையில் உள்ள பள்ளங்களை ஆய்வு செய்வதற்காக நெடுஞ்சாலைத் துறையின் பொறியாளர் பிரகாஷ் சேதேகர் சென்றுள்ளார்.
கங்காவேலி பாலம் அருகே ஆய்வு செய்ய வந்த பிரகாஷ் சேதேகருடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ நிதிஷ் ரானேவும் அவருடைய ஆதரவாளர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அங்கு ஏற்கெனவே பக்கெட்டுகளில் தயாராக வைத்திருந்த சேற்றை எடுத்து வந்து அவர் மீது ஊற்றியுள்ளனர். இதைத் தொடர்ந்து அவரைப் பாலத்தில் கட்டி வைக்கவும் அவர்கள் முயற்சி செய்துள்ளனர்.
இது தொடர்பான வீடியோ வெளியாகி தற்போது வைரலாகப் பரவி வருகிறது. சமீபத்தில் இதேபோல மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் அரசு அதிகாரியை பாஜக எம்.எல்.ஏ விஜய் வர்க்கியா கிரிக்கெட் மட்டையால் தாக்கியது குறிப்பிடத்தக்கது. அதற்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது அதே போல மற்றொரு தாக்குதல் சம்பவத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இதற்கு எங்களைக் கொன்றுவிட்டால் நல்லது..’ வீடியோ வெளியானதால் சிக்கிய எம்.எல்.ஏ..
- 'உடல்நலக் குறைவால் உயிரிழந்த எம்.எல்.ஏ'.. சிகிச்சைப் பலனின்றி நடந்த சோகம்!
- 'அடிச்சான்பாரு அப்பாய்மெண்ட் ஆர்டர்'.. ரூ.15 லட்சம் ஏமார்ந்த என்ஜினியரிங் பட்டதாரி.. அரசுப்பள்ளி ஆசிரியரின் நூதனம்!
- வீடியோ பரவியதால் என்ஜினியரை தோப்புகரணம் போடச் சொன்னதற்கு வருத்தம் தெரிவித்த எம்.எல்.ஏ!
- ‘தண்ணீர் கேட்டு தர்ணாவில் ஈடுப்பட்ட பெண்ணை சரமாரியாக தாக்கிய பாஜக எம்.எல்.ஏ’.. பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ!
- ‘தேர்தல் நேரத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு!.. ‘எம்.எல்.ஏ உட்பட 6 பேர் பலி’!.. பதற வைக்கும் சம்பவம்!
- வாவ்.. 'இப்படி' ஒரு பொறுப்பில் இருக்கும் மகனுக்கு 'இப்படி' ஒரு அப்பாவா? குவியும் பாராட்டுக்கள்!
- ‘மன்னிச்சுடுங்க .. மனைவி, குழந்தைங்கள கொன்னுட்டேன்’.. குடும்ப வாட்ஸ் ஆப் குரூப்பை நடுங்கவைத்த நபர்!
- கல்வெட்டில் பெயர் இல்லை.. ஷூ-வால் தாக்கி சண்டையிட்ட பாஜக எம்.பி., எம்.எல்.ஏ., பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ!