'அந்த போராட்டத்துல என் மனைவி, குழந்தைக்கு... அதனாலதான் அடிச்சேன்'.. ஹர்திக் படேலை அடித்த நபர் வாக்குமூலம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

குஜராத் மாநிலத்தின் சுரேந்திர நகர் பகுதியில், தேர்தல் பிரச்சார மேடையில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்துக்கொண்டிருந்த காங்கிரஸ் தலைவரும் குஜராத்தின் படேல் சமூகத்தைச் சேர்ந்தவருமான ஹர்திக் படேலை அறைந்தது தொடர்பான சர்ச்சை பெரிதாகிக்கொண்டிருக்கிறது.

ஹர்திக்கை கன்னத்தில் அறைந்த நபர் மீது அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் சரமாரியாகத் தாக்குதல் நிகழ்த்தினர். அதனால் அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இந்நிலையில் ஹர்திக்கை தாக்கிய நபரான தருண், ஹர்திக் படேலை தான் தாக்கியதற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.

கடந்த 2015-ஆம் ஆண்டு, அகமதாபாத்தில் நடந்த படேல் சமூகப் போராட்டத்தின்போது, மருத்துவமனையில் கர்ப்பிணியாக அனுமதிக்கப்பட்டிருந்த தன் மனைவிக்கும் குழந்தைக்கும் மருந்து வாங்க முடியாத நிலையில் கடையடைப்பு நிகழ்ந்ததால் அந்த கோபத்தில் ஹர்திக் படேலின் கன்னத்தில் அறைந்ததாகவும், குஜராத்தின் எப்பகுதியை வேண்டுமானாலும் கடையடைப்பு நிகழ்த்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இவர் என்ன ஹிட்லரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அந்த ஆண்டு போராட்டம் என்பது படேல் சமூகத்தை, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுடன் சேர்க்க வேண்டி வலியுறுத்தியும், கல்வியில் இட ஒதுக்கீடு கேட்டும் அகமதாபாத்தில்,  10 லட்சம் படேல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றுகூடி ஒரே நாளில் போராடினர். பலரது உயிரிழப்புகளுக்கு பின்,  ஹர்திக் படேல் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில்தான் ஹர்திக் படேல் சமீபத்தில் காங்கிரஸில் இணைந்து, காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டி பேசினார். அப்போது நடந்ததுதான் இந்த சம்பவம்.

CONGRESS, HARDIKPATEL, GUJARAT, VIRALVIDEOS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்