விராட் 'கோலி'யை குறிப்பிட்டுச் சொன்ன 'அந்த' வார்த்தை... 'சர்ச்சை'யில் சிக்கிய 'காங்கிரஸ்' 'பிரமுகர்'!!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, கடந்த தீபாவளி தினத்தன்று தனது ரசிகர்களுக்கு தீபாவளி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

அப்போது கோலி வாழ்த்து தெரிவித்திருந்த அந்த வீடியோவில், 'சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டி பட்டாசுகளை வெடிக்காதீர்கள். உங்களின் அன்பானவர்களுடன் எளிமையாக தீபம் ஏற்றியும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடுங்கள்' என குறிப்பிட்டிருந்தார்.

சுற்றுச்சூழலை பாதுகாக்க பட்டாசு வெடிக்க வேண்டாம் என கோலி கேட்டுக் கொண்டது ரசிகர்களால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது. ஐபிஎல் தொடரின் போட்டிகளின் போது பட்டாசு வெடித்ததைப் பற்றி எதுவும் கேட்காமல் எங்களுக்கு மட்டும் அறிவுரை சொல்வதா? என அனைவரும் கேள்வி எழுப்பினர.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் செய்தி தொடர்பாளருமான உதித் ராஜ், கோலியை குறித்து ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அதில், 'அனுஷ்கா, தனது நாய் விராட் கோலியை கவனித்துக் கொள்ள வேண்டியதில்லை. நாயை விட யாரும் உண்மையானவர்கள் இல்லை' என ஹிந்தியில் குறிப்பிட்டுள்ளார். 

 

விராட் கோலியை 'நாய்' என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உதித் ராஜ் குறிப்பிட்டது அவர் மீது கடும் சர்ச்சையையும், எதிர்ப்பையும் உருவாக்கியது. இதனைத் தொடர்ந்து, உதித் ராஜ் மேலும் ஒரு ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அதில், 'நான் விராட் கோலியின் கருத்தை தான் பாராட்டினேன். அவரை நாயுடன் ஒப்பிட்டு விமர்சித்தனர். அவர்களுக்கான பதிலடியாகத் தான் நான் நாய் மிகவும் விசுவாசமானது என தெரிவித்தேன். அதனை ஊடகங்கள் தவறாக புரிந்து விட்டது' என பதில் தெரிவித்துள்ளார். 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்