'இருமல், தொண்டைவலி எதுவுமே இல்ல...' 'கொரோனாவா இருக்காதுன்னு நெனச்சோம், ஆனால்...' 'டெஸ்ட் பண்ணி பார்த்தா கொரோனா பாசிட்டிவ்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரள மாநிலத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்த பட்ட பெண்ணுக்கு எந்த வித அறிகுறியும் இல்லாமல் கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்திலும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது.

சீனாவிலிருந்து தற்போது உலகமெங்கும் பரவி வரும் கோவிட் 19 என்னும் கொரோனா வைரசிற்கு உலகெங்கிலும் இதுவரை 13 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

கொரோனா வைரசால் பாதிப்படைந்த ஒருவரை அறிய உலக சுகாதார அமைப்பு சில அறிகுறிகளை வெளியிட்டுள்ளது. முதலில் காய்ச்சலாக துவங்கிய பின் வறட்டு இருமல் ஏற்பட்டு அதன்பின் சுவாசக் கோளாறுகள் ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர். இம்மாதிரியான அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்று கோவிட் 19 பரிசோதனை செய்துகொள்ள வலியுறுத்தி வருகிறது அரசு.

இந்நிலையில் கேரளாவில் கடந்த மாதம் டெல்லி சென்று திரும்பியதால் 19 வயது பெண் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தபட்டு கண்காணிப்பில் இருந்துள்ளார். நேற்றோடு 14 நாட்கள் முடிந்த நிலையில் அவருக்கு எந்த வித அறிகுறியும் தென்படவில்லை. எனவே இவருக்கு கொரோனா தொற்று இருக்காது என மருத்துவர்கள் எண்ணினார்.

இருப்பினும் ஒருமுறை கோவிட் 19 பரிசோதனை செய்யலாம் என முடிவு செய்தால் நிலையில், அவரது பரிசோதனை முடிவு மருத்துவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

எனவே கேரள அரசு, மாணவியின் உடல்நிலையை ஆய்வு செய்ய, மருத்துவ ஆராய்ச்சிக் குழுவை நியமித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்