அடேங்கப்பா! ஜனவரில மட்டும் '16 நாள்' லீவாம்... எந்தெந்த தேதில.... 'பேங்க்' இருக்காதுன்னு தெரிஞ்சுக்கங்க!
முகப்பு > செய்திகள் > இந்தியாஜனவரி மாதம் மட்டும் மொத்தம் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என, தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் வங்கிகளுக்கு ஜனவரியில் மட்டும் மொத்தம் 16 நாட்கள் விடுமுறை தினங்கள் வருகின்றன. குறிப்பாக புத்தாண்டு, பொங்கல், சனி-ஞாயிறு என தமிழகத்துக்கு ஏராளமான விடுமுறை தினங்கள் வருகின்றன. அந்த 16 நாட்கள் எந்த தேதி மற்றும் கிழமையில் வருகின்றன என்பதை இங்கே பார்க்கலாம்.
வருடத்தின் முதல் நாளான இன்று அரசு விடுமுறை என்பதால் அனைத்து வங்கிகளும் இயங்காது. ஜனவரி 2-ம் தேதி மன்னம் ஜெயந்தியை முன்னிட்டு கேரளாவிலும், குரு கோவிந்த் சிங் ஜெயந்தியை முன்னிட்டு சில மாநிலங்களிலும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 11-ம் தேதி சனிக்கிழமை மிசினரி தினத்தை முன்னிட்டு மிசோரம் மாநிலத்தில் மட்டும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். ஜனவரி 15-ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்திலும், மகர சங்கராந்தி, போகலி பிகு, துசு பூஜா, ஹடாகா பண்டிகை ஆகியவற்றை முன்னிட்டு ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, அஸ்ஸாம், பஞ்சாப், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 16-ம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழக வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். ஆந்திரா, புதுச்சேரியிலும் அன்று வங்கிகளுக்கு விடுமுறைதான். ஜனவரி 17-ம் தேதி உழவர் திருநாள் என்பதால் அன்று தமிழகத்திலும் புதுச்சேரியிலும் வங்கிகள் செயல்படாது. ஜனவரி 23-ம் தேதி நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் பிறந்தநாளை முன்னிட்டு மேற்குவங்கம், திரிபுரா, ஒடிசா, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை. ஜனவரி 25-ம் தேதி சோனம் லோச்சர் பண்டிகையை முன்னிட்டு சிக்கிமிலும், இமாசலப் பிரதேச மாநில நாளை முன்னிட்டு இமாசலப் பிரதேச வங்கிகளும் இயங்காது.
ஜனவரி 25-ம் தேதி நான்காவது சனிக்கிழமை என்பதால் அன்று வழக்கம்போல வங்கிகளுக்கு விடுமுறை. ஜனவரி 30-ம் தேதி வசந்த் பஞ்சமியை முன்னிட்டு சில மாநிலங்களில் வங்கிகள் இயங்காது. ஜனவரி 31-ம் தேதி மே டாம் மே பி பண்டிகையை முன்னிட்டு அஸ்ஸாம் மாநில வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 26 ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்று வங்கிகள் இயங்காது. மற்ற ஞாயிற்றுக் கிழமைகளிலும் வழக்கம்போல வங்கிகளுக்கு விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சாப்பாட்டில் 'விஷம்' வைத்து... கொலை செய்ய 'திட்டம்' தீட்டும் தாவூத்?.... உச்சக்கட்ட பாதுகாப்பில் திகார் சிறை!
- பேங்க் அக்கவுண்ட் அபேஸ்.. ஆன்லைனில் ஷாப்பிங்.. திருடனுக்கு ஆதார் எண் மட்டும் போதும் போலிருக்கே? என்ஜினியருக்கு நேர்ந்த கதி!
- அரையாண்டு 'விடுமுறை' மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு... புதிய தேதி 'குறித்து' விரைவில் அறிவிப்பு?
- அக்காவின் கல்யாணத்திற்கு... துணி எடுக்கப்போன இளைஞர்... எலெக்ட்ரிக் ட்ரெயினில் சாகசம்... நொடியில் நடந்த கோரம்... பதறவைத்த வீடியோ!
- 'கள்ளுக்கடை', சுற்றுலா... 17 கொலைகள்... இந்தியாவின் மிகப்பெரிய 'சீரியல்' கில்லர்... சிக்கிய பின்னணி!
- பொள்ளாச்சி வழக்கு... சுஜித், சுபஸ்ரீ... ஹைதராபாத் என்கவுண்டர்... 2019-ம் ஆண்டின் மறக்க 'முடியாத' துயரங்கள்!
- 'இது தப்பான உறவுன்னு சொன்னேன்'...'கேக்கல'...'பிளான் போட்டு தூக்கிய தாய்'...பதற வைக்கும் சம்பவம்!
- ‘நண்பனுக்காக’ பெண்ணாக மாறி ‘திருமணம்’ செய்தேன்... ‘அதிர்ச்சியை’ ஏற்படுத்திய ‘புகார்’...
- நியூ இயர் 'பார்ட்டி'யில்... 'சிங்கிள்ஸ்க்கு' நோ அனுமதி... ஸ்டிரிக்ட் 'ஆர்டர்' போட்ட போலீஸ்!
- நாட்டிலேயே 'சம்பளத்தை' அதிகமா அள்ளிக்கொடுக்குற 'சிட்டி' இதுதான்... எவ்ளோ தெரியுமா?