'பிரபல' ஓடிடி தள 'வெப் சீரிஸ்' சர்ச்சை! .. வெளியாகும் முன்பே இயக்குநர், தயாரிப்பாளர் மீது பாய்ந்த வழக்கு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

காட்மேன் வெப் சீரிஸ் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மீது போலீஸாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. (குறிப்பு: இணைப்பில் உள்ள படம் - காட்மேன் வெப் சீரிஸில் வரும் ஒரு காட்சித்துண்டு)

'பிரபல' ஓடிடி தள 'வெப் சீரிஸ்' சர்ச்சை! .. வெளியாகும் முன்பே இயக்குநர், தயாரிப்பாளர் மீது பாய்ந்த வழக்கு!
Advertising
Advertising

கடந்த சில தினங்களுக்கு முன்பாகத்தான் காட்மேன் வெப் சீரிஸின் டீசர் வெளியாகியிருந்தது. பிரபல தனியார் நிறுவனத்தின் ஓடிடி இணையதள சேனலில் வரும் ஜூன் 12-ஆம் தேதி வெளியாகவிருப்பதாக கூறப்பட்ட இந்த வெப்சீரிஸின் அந்த டீசரில்,குறிப்பிட்ட இனமக்களை அவதூறாக விமர்சித்து வசனம் வைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன.

இதனை அடுத்து அந்த டீசரில் உள்ள வசனங்கள் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய சிலவற்றை மட்டும் நீக்கிய படக்குழுவினர் புதிய டீசரை மீண்டும் வெளியிட்டனர். இந்த நிலையில், காட்மேன் வெப் சீரிஸ் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மீது போலீஸாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்