"அது மெண்டல் டார்ச்சர் தான்".. கல்யாணமாகி 10 மாசத்துல டைவர்ஸ்.. மனைவி சொன்னதை கேட்டு அதிர்ச்சியான நீதிபதிகள்.. வெளியான பரபரப்பு தீர்ப்பு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கேரளாவில் திருமணமான 10 மாதத்தில் விவாகரத்து வழங்கக்கோரி நீதிமன்றத்துக்கு சென்றிருக்கிறார் இளம்பெண் ஒருவர். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டிருக்கின்றனர்.

Advertising
>
Advertising

Also Read | ஆத்தாடி.. இந்தியாவுலயே நீளமான சரக்கு ரயில்.. கிலோமீட்டர் கணக்குல நீளுதே.. அமைச்சர் பகிர்ந்த மிரளவைக்கும் வீடியோ..!

திருமணம்

கேரளாவில் திருமணமாகி 10 மாதங்களில் விவாகரத்து கோரி குடும்ப நல நீதி மன்றத்திற்கு சென்றிருக்கிறார் இளம்பெண் ஒருவர். தனது கணவர் பிற பெண்களுடன் தன்னை ஒப்பிட்டு பேசுவதாகவும் அடிக்கடி தன்னை வாழ்த்தி பேசுவதால் அவருடன் வாழ விருப்பம் இல்லை என அந்த இளம்பெண் நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்திருக்கின்றனர். இந்நிலையில், கணவர் இந்த தீர்ப்பை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்கு சென்றிருக்கிறார்.

அந்த ஆணுக்கு 29 வயதும் அவரது மனைவிக்கும் 27 வயதும் ஆகிறது. இந்நிலையில், இருவருக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றிருக்கிறது. 10 மாதங்களே ஒன்றாக வாழ்ந்த நிலையில் இளம்பெண் விவாகரத்து கோரியிருக்கிறார்.

10 மாதங்கள்

2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றிருக்கிறது.  ஆனால், அதே ஆண்டு நவம்பர் மாதம் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார் இளம்பெண். அவர் தனது மனுவில் தனது கணவர் பிற பெண்களுடன் தன்னை ஒப்பிட்டு பேசுவதுடன், தான் அழகாக இல்லை என்றும், அவருடைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாதவராக தன்னை நடத்தியதாகவும், அதனால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டிருப்பதாகவும் ஆகவே தனக்கு விவாகரத்து பெற்றுத்தரும்படி குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனில் கே நரேந்திரன், சிஎஸ் சுதா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த நீதிபதிகள்,"பேச்சின் மூலமாக ஒருவரை துன்புறுத்துவது மனரீதியாக நடத்தப்படும் கொடுமையே ஆகும். மனைவியை பிற பெண்களுடன் ஒப்பிட்டு பேசுவது, மற்றும் தனக்கு சரியான நிகர் இல்லை எனக்கூறுவது மனைவிக்கு பெரும் மனஉளைச்சலை தரும். இது வார்த்தைகளின் மூலம் கொடுமைப்படுத்துவது ஆகும். இதனை மனைவி பொறுத்துக்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்க முடியாது" எனக் கூறி விவாகரத்து வழங்கி உத்தரவிட்டனர். மேலும், கணவரின் மேல்முறையீட்டையும் தள்ளுபடி செய்தனர்.

Also Read | ரத்தன் டாடாவே முதலீடு செய்த 'Start up' நிறுவனம்.. "இந்தியாலயே இதான் முதல் தடவ.." சபாஷ் போட வைத்த உதவியாளர்!!

KERALA, WIFE, WOMAN, MENTAL TORTURE, KERALA HC

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்