'ராஜினாமா' செய்ய 'வற்புறுத்தும்' நிறுவனம்... '2000 ஊழியர்களுக்கு' வாட்ஸ்அப் மூலம் 'தகவல்...' 'மே 31வரை அவகாசம்...'

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாபுல்ஸ் குழுமம் 2000 க்கும் மேற்பட்ட ஊழியர்களை வாட்ஸ்அப் அழைப்புகள் மூலம் ராஜினாமா செய்யுமாறு கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது, இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஊழியர்கள் குறிப்பிடுகையில் ராஜினாமா குறித்து முறைப்படி எந்த அழைப்பும் விடுக்கவில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.

Advertising
Advertising

கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்கள் கூட தங்கள் ஊழியர்களை பதவி நீக்கம் செய்யும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், பிரபல இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் 2000 பணியாளர்கள் வாட்ஸ்ஆப் மூலம் தங்கள் நிர்வாகத்திடமிருந்து ராஜினாமா அழைப்புகளைப் பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

“தற்போது வணிகம் மிகவும் மந்தமாக உள்ளது. பல கிளை அலுவலகங்களை நாம் மூடி வருகிறோம். பல பணியாளர்களை ராஜினாமா செய்யுமாறு கூறிவிட்டோம், உங்களுக்கு மே 31வரை அவகாசம் இருக்கிறது” என்பதுபோன்ற அழைப்புகள் வந்திருப்பதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.

 

இந்த நேரடி அழைப்புகளில் வேலை நீக்கம் செய்வதோடு மட்டுமல்லாமல், பணியாளர்கள் வேறு வேலையைத் தேடிக் கொள்வது தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.

ஊழியர்கள் ராஜினாமா செய்யாவிட்டால் பணி நீக்கம்செய்யப்படுவார்கள் என்றும், அவர்களுக்கான ஃபைனல் செட்டில்மென்ட், எக்ஸ்பீரியன்ஸ சர்டிபிக்கெட் போன்றை வழங்கப்படாது என்றும் நிறுவனத்தின் சார்பில் கூறப்படுவதாக ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்

 

பொதுவாக, இத்தகைய வாட்ஸ்ஆப் அழைப்புகளில், உரையாடலை பதிவுசெய்ய முடியாது என்பதால், இத்தகைய அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

 

இதுகுறித்து இந்தியாபுல்ஸ் குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிடுகையில், இந்தியாபுல்ஸ் குழுமத்தி 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுவதாகவும், 2019-2020 ஆண்டுகளில்7 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை வேலைக்கு சேர்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஒவ்வொரு ஆண்டும் நிறுவனம் 10 முதல் 15 சதவீதம் வரையிலான வளர்ச்சியை பெற்று வருகிறது. இந்த ஆண்டு நடைபெறும் பணி நீக்கம் நிறுவனத்தின் கடந்தமுழு ஆண்டின் போக்கை வைத்தே நிர்ணயிக்கப்பட்டதாகவும், கடந்த 2 மாதங்களை சுட்டிக்காட்டி பணிநீக்கம் நடைபெறவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார். இது நிறுவனத்தின் வழக்கமான நடைமுறையே என்றும் சுட்டிகாட்டியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்