பிபின் ராவத்துக்கு 'ஒரு ஆசை' இருந்துச்சு...! ஒருவழியா போன வாரம் தான் 'அத' நிறைவேத்த தொடங்கினோம்...! - கடைசிவரை அவருக்கு பார்க்க கொடுத்து வைக்கல....!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சாய்னா கிராமம் உச்சக்கட்ட சோகத்தில் மூழ்கியுள்ளது.

Advertising
>
Advertising

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான முப்படைகளின் தளபதி விபின் ராவத் உத்தரகாண்ட் மாநிலம் சாய்னா கிராமத்தைச் சேர்ந்தவர். அவருடைய மனைவி மதுலிகா, சோஹாக்பூர் சமஸ்தானத்தை சேர்ந்தவர். இவர்களுக்கு கடந்த 1985-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

முப்படைகளின் தளபதி விபின் ராவத், தன்னுடைய பிறந்த ஊரான டேஹ்ராடூனில் சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டார். பல காரணங்களால் தள்ளிப் போனாலும், ஒருவழியாக கடந்த வாரம், அவரும், அவருடைய மனைவி மதுலிகா முன்னிலையில் வீடு கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது. அதிவேகமாக வீடு கட்டும் வேலை தொடங்கி நடந்து வந்த நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் அவர் இறந்த செய்தி, வீடு கட்டும் வேலைகள் அப்படியே நிறுத்தப்பட்டது.

விபின் ராவத்தின் குடும்பத்தில் ஒருவரான பாரத் சிங் ராவத் இதுகுறித்து கூறும்போது, 'முப்படைகளின் தலைமை தளபதியாக, விபின் ராவத் பதவியேற்றபோது, ஒட்டுமொத்த கிராம மக்களும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். புதன்கிழமை அன்று இந்த கொடுமையான விபத்து குறித்து கேட்டதும், எங்கள் கிராம மக்கள் நிலைக்குலைந்து போய்விட்டனர்.

அவர் அடிக்கடி என்னிடம் இங்கு ஒரு வீடு கட்ட வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். அதுமட்டுமல்லாமல் இந்த கிராமத்துக்கு போக்குவரத்து வசதியை ஏற்படுத்த சாலை அமைக்குமாறு அரசிடம் கோரிக்கையும் வைத்திருந்தார்' என்று கண்ணீர் மல்க கூறினார்.

போபாலில் வசித்து வரும் பிபின் ராவத் மனைவியின் சகோதரர் யஷ்வர்தன் சிங் கூறும்போது, ராணுவத்திடமிருந்து எங்களுக்கு ஒரு அழைப்பு வந்தது. உடனடியாக புதுடெல்லி வருமாறு சொன்னார்கள்.

இந்த அழைப்பில் ஏதோ மிக மோசமான விஷயம் இருக்கிறது என்று மட்டும் தெரிந்தது. நானும் எனது மனைவியும் டெல்லிக்கு சென்று விஷயத்தை கேள்விப்பட்டு எங்கள் குடும்பம் உறைந்து போய்விட்டது.

வரவிருக்கும் புத்தாண்டை வெகு சிறப்பாக கொண்டாட ஊருக்கு வருவதாக இருவரும் வாக்களித்திருந்தனர். ஆனால், அவர்களின் ஊர் வருகை இனி எக்காலத்திலும் நடக்காது என்று அப்போது தோன்றவே இல்லை என்று மனம் நொந்து கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்