'உனக்கு மாதவிடாய் இருக்கு'...'டெஸ்ட் பண்ணணும்'... 'பாத்ரூமுக்கு வா'... மாணவிகளுக்கு நடந்த கொடுமை!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மாதவிடாய்க் காலத்தில் கோவில் மற்றும் சமையலறைக்கு சென்றதாக எழுந்த புகாரில், மாணவிகளின் உள்ளாடைகளை களைந்து சோதனை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் பூஜ் பகுதியில் ஸ்ரீசஹ்ஜானந்த் பெண்கள் இன்ஸ்ட்டியூட் என்ற கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு தொலைதூரத்தில் இருந்து வரும் பல மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள். அவர்களுக்கு விடுதி ஒன்றும் உள்ளது. கல்லூரியின் கட்டுப்பாட்டில் உள்ள விடுதியில் 68 மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள்.

இந்நிலையில் மாதவிடாய் காலத்தில் மாணவிகள் பலரும் சமையலறைக்கு செல்வதாகவும், கல்லூரி வளாகத்தில் உள்ள கோயிலுக்கு சென்று சாமி கும்பிடுவதாக கல்லூரி முதல்வருக்கு புகார்கள் சென்றது. இதையடுத்து விடுதியில் தங்கியிருந்த 68 மாணவிகளையும் கல்லூரி நிர்வாகம் விசாரணைக்கு அழைத்தது. அப்போது   68 மாணவிகளில் யார், யார் மாதவிடாய் காலங்களில் இருக்கின்றனர் என்று முதல்வர் மற்றும் விடுதி நிர்வாகி கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. அப்போது இரண்டு மாணவிகள் தங்களுக்கு மாதவிடாய் இருப்பதாக கூறிய நிலையில், கல்லூரி நிர்வாகம் அதனை நம்ப மறுத்தது.

இதனைத்தொடர்ந்து  எஞ்சியிருந்த 66 பேரை கழிவறைக்கு அழைத்துச் சென்று, அவர்களின் உள்ளாடைகளை அகற்றச் செய்து, அவர்களுக்கு மாதவிடாய் இருக்கிறதா இல்லையா என்று சோதனை நடத்திய கொடுமை அரங்கேறியுள்ளது. கல்லூரி நிர்வாகத்தின் இந்த செயல் தற்போது வெளிவந்துள்ள நிலையில், அது கடும் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து நடந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள பொறுப்பு துணைவேந்தர், கிரந்திகுரு ஷியாம்ஜி யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

COLLEGESTUDENTS, BHUJ, STRIP, MENSTRUATING, COLLEGE GIRLS, GUJARAT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்