முதல்வன் பட பாணியில் ஒருநாள் ‘முதல்வர்’.. வரலாறு படைத்த கல்லூரி ‘மாணவி’.. குவியும் வாழ்த்து.. எந்த மாநிலம் தெரியுமா..?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

முதல்வன் பட பாணியில் 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் ஒருநாள் முதல்வர் ஆகியிருக்கிறார்.

உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வார் நகருக்கு அருகில் உள்ள தெளலத்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிருஷ்டி கோஸ்வாமி (19). இவரது தந்தை ஒரு வியாபாரி. தாய் அங்கன்வாடியில் பணியாற்றுகிறார். இன்று (24.01.2021) தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, இவருக்கு ஒரு நாள் முதல்வராக பணியாற்ற அம்மாநிலத்தில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநில வரலாற்றிலேயே முதல் பெண் முதல்வர் சிருஷ்டி தான். சிருஷ்டி முதல்வராக செயல்படும்போது, அம்மாநிலத்தின் முதல்வராக இருக்கும் திரிவேந்திர சிங் ராவத்தும் உடனிருப்பார். இந்த நிகழ்ச்சி இன்று மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது.

ரூர்கியில் உள்ள பி.எஸ்.எம். பிஜி கல்லூரியில் விவசாய பாடப்பிரிவில் மூன்றாமாண்டு இளங்களை அறிவியல் படித்துக் கொண்டிருக்கும் சிருஷ்டி, அடல் ஆயுஷ்மான் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம், உத்தராகண்ட் மாநில சுற்றுலா துறையின் ஹோம் ஸ்டே திட்டம் போன்ற திட்டங்களை இன்று ஆய்வு செய்ய உள்ளார். முதல்வன் பட பாணியில் ஒருநாள் முதல்வராக கல்லூரி மாணவி பதவியேற்ற சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்