குட் 'ஸ்டூடன்ட்'னா வாங்க, 'கலெக்டர்' ஆகலாம் ... 'மகளிர்' தின ஸ்பெஷலாக ... உதயமான ஒரு நாள் 'கலெக்டர்'
முகப்பு > செய்திகள் > இந்தியாஇன்னும் ஒரு சில தினங்களில் 'சர்வதேச மகளிர் தினம்' கொண்டாடப்படவுள்ள நிலையில், கலெக்டரின் ட்விட்டர் பதிவு ஒன்று வெகுஜன மக்களிடம் பாராட்டைப் பெற்று வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தின் கலெக்டராகவுள்ள சுமன் ராவத் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் 'சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அடுத்த ஒரு வாரத்திற்கு பள்ளிகளில் சிறந்து விளங்கும் மாணவிகளுக்கு ஒரு நாள் கலெக்டராக இருக்க வாய்ப்பளிக்கப்படும். இன்றைய கலெக்டராக ஜில்லா பரிஷத் பள்ளி மாணவி பூனம் தேஷ்முக் பணியாற்றியுள்ளார்' என பதிவிட்டு #CollectorForADay என்ற ஹேஸ்டேகையும் இணைத்து புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
ஒரு நாள் கலெக்டராக பணியாற்றிய பின் பேசிய மாணவி பூனம் தேஷ்முக், 'ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்பது என் கனவு. ஒரு நாள் கலெக்டராக இருந்த தருணம் நிச்சயம் என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று' என கூறியுள்ளார். நாட்டில் பெண்களுக்கு எதிராக பல்வேறு பிரச்சனைகள் நாள் தோறும் நிகழ்ந்து வரும் நிலையில் கலெக்டர் சுமன் ராவத் சந்திராவின் இந்த முன்னெடுப்பை அனைத்து மக்களும் பாராட்டி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "யாரோட குழந்தை இது?"... "குழந்தை கடத்தற கும்பலா?"... "கலெக்டரிடம் சிக்கிய பெண்!"...
- 'வீட்டுல பெண் குழந்தை இருக்காங்களா'?... 'அம்மா, பாட்டியோட ஒரு செல்ஃபி'... காத்திருக்கும் சர்ப்ரைஸ்!
- 'வெள்ளை சட்டை.. தொப்பி.. சைக்கிள். யாருப்பா இவரு??'.. 'மாஸ் காட்டிய' செயல்.. குவியும் பாராட்டுக்கள்!
- 'இனிமே எல்லாம் இப்படித்தான்'... திருப்பூர் கலெக்டர் அதிரடி!'.. 'குவியும் பாராட்டுக்கள்!
- ‘திடீரென ரோட்டில் மயங்கி விழுந்த முதியவர்’.. ‘உதவிக்கரம் நீட்டிய கலெக்டர்’.. குவியும் பாராட்டுக்கள்..!
- ‘காலி ப்ளாஸ்டிக் பாட்டிலுக்கு காசு’.. ‘அறிமுகமான புது கேஸ்பேக் திட்டம்’.. அசத்திய மாவட்ட ஆட்சியர்..!
- ‘சிந்துவை கல்யாணம் பண்ண போறேன்’ ‘அதுக்கான எல்லாம் தகுதியும் என்கிட்ட இருக்கு’ அதிர வைத்த முதியவர்..!
- 'வேண்டுகோள் வைத்த முன்னாள் கைதி'... நெகிழவைத்த 'கலெக்டர்'!
- ‘3 புள்ளைக்கும் சொத்த கொடுத்துட்டு’.. ‘ஒருவேளை சாப்பாட்டுக்கு, படுக்க இடமில்லாம அனாதையா சுத்துரேன்’ முதியவர் உருக்கம்!
- “இனி எங்கள நாங்களே பாதுகாத்துக்றோம்”..‘துப்பாக்கி’வேண்டி ஆட்சியரிடம் மனு கொடுத்த கோவை மாணவிகள்!