நல்ல 'உணவு' குடுக்குற அளவுக்கு 'வருமானம்' இல்ல... என்னால 'முடிஞ்சது' இதுதான்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஊரடங்கு காலத்தில் தென்னை மரம் ஏறும் தொழிலாளி ஒருவர், செய்து வரும் உதவி கேரள மாநில போலீசாரை நெகிழ வைத்துள்ளது.

கொரோனா தொற்றை தடுக்க நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. மறுபுறம் கொரோனாவை தடுக்க மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள், போலீசார், துப்புரவு தொழிலாளர்கள், மருத்துவமனை பணியாளர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் என பலரும் தங்களது உயிரையும் துச்சமாக மதித்து களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் போலீசாருக்கு ஊரடங்கு காலத்தில் தன்னால் இயன்ற உதவிகளை செய்து வரும் கேரளாவை சேர்ந்த தென்னை மரத்தொழிலாளி கிரீஷ் என்பவரின் மனிதாபிமான செயல், தற்போது நாடு முழுவதும் வைரலாகி வருகிறது. ஒரு தென்னை மரம் ஏறினால் 100 ரூபாய்க்கும் குறைவாகத் தான் அவருக்கு வருவாய் கிடைக்கும். ஆனாலும் தன்னுடைய வருமானத்தின் ஒரு பகுதியை அவர் போலீசாருக்கு உதவி செய்ய பயன்படுத்துகிறார்.

குறைந்தது தினமும் 50 போலீசாருக்கு தண்ணீர், இளநீர், பழங்கள் ஆகியவற்றை கிரீஷ் அளித்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''நம்மை பாதுகாக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு இருக்கின்றனர். போலீஸாரின் பணியைப் பாராட்டிக் கௌரவிக்கும் வகையில் நல்ல உணவு கொடுக்கும் அளவுக்கு எனக்கு வருமானம் இல்லை. அதனால்தான் என்னால் முடிந்த வகையில் வாழைப்பழம், இளநீர், சோடா, தண்ணீர் பாட்டில்களைக் கொடுக்கிறேன்,'' என தெரிவித்து இருக்கிறார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்