கொரோனா சிகிச்சைக்கு மலேரியாவுக்கு பயன்படுத்தும் மருந்து.. இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரை..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா சிகிச்சைக்கு மருந்தை இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது.

உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். 415 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், கொரோனா வைரஸுக்கான தேசிய சிறப்பு படையை அமைத்துள்ளது.

இந்த தேசிய சிறப்பு படையானது மலேரியாவுக்கு வழக்கப்படும் ஹைடிராக்சி குளோரோகுயின் என்ற மருந்தை கொரோனா வைரஸ் பாதிப்பு சிகிச்சை வழங்க பரிந்துரை செய்துள்ளது. ஆனால் இந்த மருந்தை மருத்துவர் அளிக்கும் பரிந்துரையின் பேரிலேயே சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை அமெரிக்கா அரசுவும் கொரோனா சிகிச்சைக்காக பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

COVID19, HYDROXYCHLOROQUINE, CMR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்