"மாப்பிள்ளை போட்ருந்த ட்ரெஸ் பிடிக்கல".. கல்யாண வீட்டுக்குள் பறந்த கற்கள்..கைகலப்பில் முடிந்த திருமணம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மத்தியப்பிரதேச மாநிலத்தில் மணமகன் அணிந்திருந்த உடையால் திருமணத்தன்று பிரச்சனை ஏற்பட்டது அப்பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | என்னது டைனோசர் குட்டிகளா?.. உலக வைரலான வீடியோ.. பாத்துட்டு "ஜர்க்" ஆன நெட்டிசன்கள்..!

திருமணம்

திருமணம் செய்யும் முறைகள் இந்தியா முழுவதும் வெவ்வேறு விதமாக இருப்பது போலவே, திருமணத்தன்று மணமக்கள் அணியவேண்டிய உடைகளும் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் உள்ள பழங்குடி இனத்தை சேர்ந்த மக்கள் தங்களுக்கே உரித்த தனித்தன்மையான அடையாளங்களுடன் வாழ்ந்துவருகின்றனர். அவர்களிடையே திருமணம் போன்ற நிகழ்வுகளும் காலங்காலமாக அவர்களுடைய பண்பாட்டின்படியே நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒரு பழங்குடி மக்களின் திருமணத்தில் மாப்பிள்ளை அணிந்திருந்த உடை பிடிக்கவில்லை என சண்டை ஏற்பட்டிருக்கிறது.

உடை

மத்திய பிரதேச மாநிலம், தார் மாவட்டத்தில் உள்ளது மங்பேடா என்னும் கிராமம். இங்கு கணிசமான அளவில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்துவருகின்றனர். இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை நடைபெற இருந்த திருமணத்தில் மணமகன் ஷெர்வானி உடையணிய, இதற்கு மணமகளின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.

இந்தப் பகுதியை பொறுத்தவரையில் திருமணத்தன்று மணமகன், வேஷ்டி மற்றும் குர்தா அணிவதே வழக்கமாகும். இந்நிலையில் இந்த திருமணத்தில் மாப்பிள்ளை ஷெர்வானி அணிந்திருந்ததால் இருவீட்டாருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்ததாக தெரிகிறது. ஒருகட்டத்தில் சண்டை பெரிதாகி கற்களை கொண்டு ஒருவரை ஒருவர் தாங்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.

விசாரணை

இதனை அடுத்து, இருவீட்டாரும் காவல்துறையில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் அதன் அடிப்படையில் சில நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 294 (நாகரீகமற்ற செயல்), 323 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்) மற்றும் 506 (குற்ற மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், திருமணத்துக்கு வந்தவர்கள் தான் இந்த சண்டையில் ஈடுபட்டதாகவும் தங்களுக்கும் மணமகள் வீட்டைச் சேர்ந்தவர்களுக்கும் இதில் தொடர்பில்லை என மணமகன் சுந்தர்லால் பத்திரிக்கையாளர்களிடத்தில் தெரிவித்திருக்கிறார். அதன் பிறகு, கடந்த சனிக்கிழமையன்று எளிமையான முறையில் இந்த சுந்தர்லாலின் திருமணம் நடைபெற்றிருக்கிறது.

மத்திய பிரதேச மாநிலத்தில் மணமகன் அணிந்திருந்த உடையால் கல்யாண வீட்டில் தகராறு ஏற்பட்டு, காவல்துறை வரை விஷயம் சென்றது தற்போது அப்பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

WEDDING, GROOM, SHERWANI, GROOM WORE SHERWANI, மாப்பிள்ளை, கல்யாண வீடு, திருமணம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்