சிம்பிளா திருமணம்.. கல்யாணத்துக்கு வச்சிருந்த பணத்தை ஆதரவற்ற குழந்தைகளின் கல்விக்காக கொடுத்த குடிமைப்பணி தம்பதி..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தங்களது திருமணத்தை எளிமையான முறையில் நடத்தி அதற்கு செலவழிக்கப்பட இருந்த தொகையை ஆதரவற்ற குழந்தைகளின் படிப்பு செலவிற்காக நன்கொடையாக அளித்து இருக்கின்றனர் குடிமைப் பணி தம்பதியர். இவர்களது இந்த செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

Advertising
>
Advertising

                             Images are subject to © copyright to their respective owners.

Also Read | "அவங்களும் சந்தோஷமா இருக்கட்டுமே".. சிங்கிள்ஸ்-க்கு சிறப்பு போனஸ்.. காதலர் தினத்தன்று மேயர் கொடுத்த சர்ப்ரைஸ்..!

டெல்லியைச் சேர்ந்தவர் ஷிவம் தியாகி. குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ள இவர் தற்போது வருவாய்த்துறை பணிக்காக மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில் இவருக்கும் இந்திய தபால் துறையில் சூப்பிரடென்டாக பணிபுரிந்து வரும் ஆர்யா ஆர்.நாயர் என்பவருக்கும் அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது. நட்பாக துவங்கிய இவர்களுடைய பயணம் காதலாக மாறியுள்ளது. இதனை அடுத்து இது குறித்து தங்களது பெற்றோரிடம் இருவருமே பேசி இருக்கின்றனர். இதனையடுத்து இருவருக்கும் திருமணம் செய்யவும் பெரியோர்களால் முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது.

Images are subject to © copyright to their respective owners.

ஆனால் திருமணத்திற்காக ஆடம்பரமாக செலவு செய்ய விரும்பவில்லை எனவும் அந்த தொகையை கொண்டு ஆதரவற்ற குழந்தைகளின் படிப்பு செலவுக்கு உதவி இருப்பதாகவும் தெரிவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கின்றனர் இந்த தம்பதியர். அதன்படி கேரள மாநிலம் பாம்படியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் இவர்களின் திருமணம் எளிமையான முறையில் நடைபெற்று இருக்கிறது.

Images are subject to © copyright to their respective owners.

தங்களது திருமணத்திற்காக செலவழிக்கப்பட இருந்த தொகையை கோட்டயம் மாவட்டம் வழூரில் அமைந்துள்ள புண்யம் என்ற குழந்தைகள் இல்லத்தில் பயின்று வரும் 20 குழந்தைகளின் கல்விச் செலவுக்கு இந்த தம்பதியர் அளித்திருக்கின்றனர். இதுகுறித்து மணமகள் ஆர்யா நாயர் பேசுகையில்," கேரளாவை பொறுத்தவரை திருமணங்கள் பிரம்மாண்டமாக நடைபெறும். என்னுடைய பெற்றோர் மற்றும் உறவினர் எனது திருமணத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் குழந்தைகளின் கல்வி செலவுக்காக திருமணத்தை எளிமையாக நடத்தினோம்" என தெரிவித்திருக்கிறார்.

Images are subject to © copyright to their respective owners.

2020 ஆம் ஆண்டு குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஷிவம் தியாகி இனிவரும் ஆண்டுகளிலும் ஆதரவற்ற இல்லங்களில் உள்ள குழந்தைகளின் கல்விக்காக இருவரும் உதவ இருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்து இருக்கிறார். தங்களது திருமணத்தை எளிமையான முறையில் நடத்தி அந்த தொகையினை கொண்டு ஆதரவற்ற குழந்தைகளின் படிப்பு செலவுக்கு உதவி செய்திருக்கும் இந்த தம்பதியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Also Read | 9 பேருடன் கல்யாணம்.. எல்லார்கிட்டயும் சொன்ன ஒரே பொய்.. கலங்கிப்போன மாப்பிள்ளை..!

CIVIL SERVICE COUPLE, SPONSORS, CHILDREN EDUCATION, MARRIAGE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்