"ஒரு மாத்திரை வெறும் 68 ரூபா தான்"... 'இந்தியா'வில் அடுத்த மாதம் களமிறங்கும்... 'கொரோனா' தடுப்பு மாத்திரை!!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் உலகம் முழுவதும் நாளுக்கு நாள் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பல நாடுகள் இதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. சில இடங்களில் சோதனை முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், முன்னணி பார்மா நிறுவனமான சிப்லா நிறுவனம் ஃபேவிபிராவிர் வகை மருந்தை தயாரித்துள்ளது. இது பரவலாக நல்ல முடிவுகளை அளித்துள்ளது. இந்த மருந்துக்கு சிப்லென்சா என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், இதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
மாத்திரை வகையிலான இந்த மருந்து ஒன்றுக்கு ரூபாய் 68 வீதம் விற்கப்படும் என சிப்லா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் இந்த மருந்து மருத்துவமனை மூலமாக கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு விற்பனை செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஃபேவிபிராவிர் மருந்து ஜப்பானின் நிறுவனம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப மற்றும் நடுத்தர பாதிப்பில் உள்ள நோயாளிகளுக்கு இந்த மருந்து நல்ல முடிவுகளை கொடுத்துள்ளதால், மருந்தை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் முதலில் இந்த மருந்தை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனையில் 'ரிஸ்க்' எடுத்த ஒரே 'இந்தியர்'!!... "வேணாம்டா, கொரோனா வரும்ன்னு எல்லாம் சொன்னாங்க"... ஆனா நான் கொஞ்சம் கூட பயப்படல... இங்கிலாந்தில் மாஸ் காட்டிய 'இந்தியர்'!!!
- 'கொரோனா' தடுப்பு மருந்து 'ரெடி'... "டெஸ்ட் பண்ண எல்லாருக்கும் நல்ல ரிப்போர்ட் கெடச்சுருக்கு"... பல்கலைக்கழகத்தின் சோதனை முடிவில் கிடைத்த 'குட் நியூஸ்'!!!
- இந்த கொரோனா தடுப்பூசியில அப்படி என்ன தான் ஸ்பெஷல்...? 'ஒண்ணு இல்ல, ரெண்டு விஷயம் இருக்கு...' - ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் அறிவிப்பு...!
- ”கொரோனா'வ சும்மா தட்டி தூக்க 'இந்தியா'வால முடியும்...! இந்த ‘உலகத்துக்கே’ இந்தியா உதவி பண்ணப்போகுது...!” - ’முதல்’ தடுப்பூசி’ கண்டுபிடிப்பில் நம்பிக்கை தெரிவித்த 'பில்கேட்ஸ்'!
- 'சீக்கிரம் தரமான சம்பவங்களை பாப்பீங்க'... 'குதூகலமான டிரம்ப்' ... 'தடுப்பு ஊசி' குறித்து பரபரப்பு தகவல்!