"சோடி போட்டுக்குவமா சோடி!".. சீனாவின் 'டிக்டாக்கிற்கு' மாற்றாக 'களமிறங்கும்' இந்தியாவின் 'புதிய ஆப்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

டிக்டாக் செயலிக்கு மாற்றாக சிங்காரி என்கிற புதிய செயலி ஒன்றை பெங்களூர் புரோகிராமர்ஸ் உருவாக்கியுள்ளனர்.

Advertising
Advertising

இந்தியாவைப் பொருத்தவரை கோடிக்கணக்கானோர்  பயன்படுத்தும் சீன செயலியான டிக்டாக்கிற்கு பெரிய மவுசு உள்ளது.

இந்நிலையில் டிக்டாக் செயலிக்குப் போட்டியாக பெங்களூரைச் சேர்ந்த புரோகிராமர்ஸான பிஸ்வத்மா நாயக் மற்றும் சித்தார்த் கவுதமின் ஆகியோர் ச் சிங்காரி என்கிற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இந்தச்செயலியின் மூலம் நண்பர்களுடன் மெசெஜ் அனுப்பி சாட் செய்யவும், வீடியோவை பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றம் செய்யவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு, வாட்ஸ்அப் ஸ்டெட்டஸ், வீடியோ கிளிப்ஸ், ஆடியோ கிளிப்ஸ், ஜிஐஎஃப் ஸ்டிக்கர்ஸ் மற்றும் புகைப்படங்களை உருவாக்கவும், புதிய நண்பர்களுக்கு மெசெஜ் அனுப்பவும், இண்டர்நெட்டில் மற்றவற்றைத் தேடிப்பார்க்கவும் முடியும் என்றும், செய்திகள், நகைச்சுவை வீடியோக்கள், பாடல்கள், ஸ்டேட்டஸ் வீடியோக்கள், தத்துவ வாக்கியங்கள், மீம்ஸ் ஆகியவற்றையும் இந்த செயலியி காண முடியும் என்றும் கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி, கன்னடம், வங்க மொழி, பஞ்சாபி, குஜராத்தி, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பயன்படுத்தக் கூடிய  இந்தச் செயலிக்கு இந்தியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என்பது தற்போது வரை ஒரு லட்சம் பேர் இதைப் பதிவிறக்கம் செய்துள்ளதில் தெரியவருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்