'கொடுத்த வாக்கை காப்பாத்த நாங்க என்ன நக்கீரன் பரம்பரையா'?... 'எல்லையில் இப்படி ஒரு காரியத்தை செய்யலாமா?'... சீண்டிய சீனா!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

எல்லையோரப் பகுதிகளில் சீனா அத்துமீறிய சம்பவம், மீண்டும் எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய, சீன எல்லையில் அவ்வப்போது இருநாடுகளுக்கும் உரசல் ஏற்படுவது வழக்கம். அந்தவகையில் கடந்த ஆண்டு லடாக் பகுதியில் அத்துமீற முயன்ற சீன படையினரை இந்திய ராணுவத்தினர் தடுத்தனர். இதனால் இரு நாடுகளுக்கிடையே பதற்றமான சூழ்நிலை உருவானது. இதனால் பேச்சுவார்த்தை மூலம் சமரசம் ஏற்பட்டது.

அதன்படி எல்லையோர பகுதியிலிருந்து இரு நாடுகளும் படைகளை விலக்கிக்கொள்வது என முடிவெடுக்கப்பட்டது. ஆனால் இந்த வாக்குறுதியை காப்பாற்றாத சீனா 17 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தனது சுயரூபத்தைக் காட்ட ஆரம்பித்துள்ளது சீனா. இந்திய எல்லையையொட்டியுள்ள சீன பகுதிகளில் வீரர்கள் தங்குவதற்கான கட்டமைப்புகளை அந்நாட்டு ராணுவம் உருவாக்கி வருவது வெட்ட வெளிச்சத்திற்கு வந்தது.

மேலும் மேலும் எல்லையொட்டிய பகுதிகளில் விமானங்கள் தரையிறங்குவதற்கான கட்டமைப்புகளை அதிகரிக்கவும் சீன ராணுவம் முயன்று வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் இந்தியா, சீன எல்லையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்