'கன்னியாகுமரி முனையிலிருந்து 290 கிமீ'... 'இலங்கை துறைமுகத்தில் சீனாவுக்கு பங்கு'... இந்தியாவுக்கு ஆபத்தா?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இலங்கை துறைமுகத்தில் சீனாவுக்கு 99 ஆண்டுகள் உரிமைக்கான சட்டத்திற்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.

இலங்கையின், அம்பன்தோட்டா துறைமுகத்தை, 99 ஆண்டுகள் சீனாவுக்குச் சொந்தமாக்கும் உரிமைக்கான சட்டத்திற்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. கன்னியாகுமரி முனையிலிருந்து 290 கிலோ மீட்டர்  தொலைவிலுள்ள அம்பன் தோட்டா துறைமுகம் சுமார் 540 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும்,

கடந்த 2017 ஆம் ஆண்டு அம்பன் தோட்டா துறைமுகத்தின் மேம்பாடு, பயன்பாடு தொடர்பாக இலங்கை-சீனா இடையே உடன்படிக்கை கையெழுத்தானது. இந்த ஒப்பந்தப்படி, துறைமுகத்தில் 70 சதவீதப் பங்கு சீன அரசுக்குச் சொந்தமான வணிகத் துறைமுக நிறுவனத்துக்கு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று இதனைச் சட்டமாக இலங்கை அரசு இயற்றியுள்ளது. இந்த சூழ்நிலையில் இது இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆபத்து என இலங்கையின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். இந்து மகா கடலில் இதன் மூலம் அமைதி கெட்டுப் போகும் என அவர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளார்கள்.

இந்த மசோதாவிற்கு, இலங்கையின் தமிழ் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் அதையும் மீறி இலங்கை அரசு இந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்